பொது செய்தி

தமிழ்நாடு

உறிஞ்சு குழிகளால் நீர் மட்டம் உயர்வதால்... மகிழ்ச்சி உச்சம்!மேலும் பல இடங்களில் நிறுவுவதற்கு திட்டம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:சிக்காரம்பாளையத்தில் பொது மக்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உறிஞ்சு குழிகள் நீர் நிலைகள் வற்றாது வைப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தி மகிழ்ச்சியை நீடிப்பதால் மேலும் பல இடங்களில் இக்குழிகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.மழை பொய்த்து நிலத்தடி நீர் மட்டம் குறையும்போது, குடிநீருக்காக காலி குடங்களுடன் மக்கள் அலைவதையும், விவசாயிகள் வறண்ட பூமியை
 உறிஞ்சு குழிகளால் நீர் மட்டம் உயர்வதால்... மகிழ்ச்சி உச்சம்!மேலும் பல இடங்களில் நிறுவுவதற்கு திட்டம்

மேட்டுப்பாளையம்:சிக்காரம்பாளையத்தில் பொது மக்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உறிஞ்சு குழிகள் நீர் நிலைகள் வற்றாது வைப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தி மகிழ்ச்சியை நீடிப்பதால் மேலும் பல இடங்களில் இக்குழிகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.மழை பொய்த்து நிலத்தடி நீர் மட்டம் குறையும்போது, குடிநீருக்காக காலி குடங்களுடன் மக்கள் அலைவதையும், விவசாயிகள் வறண்ட பூமியை பார்த்து அழுவதையும் காணமுடியும்.இந்நிலையை மாற்ற, பெய்யும் மழைநீரை பூமிக்கடியில் சேகரிக்க, வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால், நாளடைவில் அத்திட்டமே மறந்து போனது எனலாம்.இதனால், பல நுாறு அடி ஆழத்துக்கு 'போர்வெல்' அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காத அவலம் பல இடங்களில் உள்ளது. நிலத்தடி நீரை காக்கவும், வரும் காலங்களில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மழைநீரை சேகரிப்பு மிக மிக அவசியம். தற்போது, வடகிழக்கு பருவமழையால், நீர் நிலைகள் நிரம்பி, உபரிநீர் கடலில் கலந்துவருவது வேதனைக்குரியது. இச்சூழலில், காரமடை அடுத்த சிக்காரம்பாளையம் ஊராட்சியில் உறிஞ்சு குழிகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த ஊராட்சியில், 15 கிராமங்கள் உள்ள நிலையில், ஏழு எருமை பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சிறியது, பெரியதுமாக, 10 குட்டைகள் உள்ளன. நிலத்தடி நீர் அதிகரிக்கும் விதமாக, கன்னார்பாளையம், காளட்டியூர் ஆகிய இரு பகுதியில் உள்ள குட்டைகளில், நான்கு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டன.இது நீர் நிலைகளில் தண்ணீர் வற்றாத நிலையை ஏற்படுத்திவருவது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில்,''நிலத்தடி நீர் 'ரீசார்ஜ்' செய்ய பொது மக்கள் பங்களிப்புடன், கன்னார்பாளையம், காளட்டியூர் குட்டைகளில், தலா இரண்டு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டன. குறைந்தபட்சம், 500 அடியிலும், அதிகபட்சம், 900 அடியிலும் இக்குழிகள் அமைக்கப்பட்டு, சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அளவுக்கு தொட்டி கட்டி, அதில் ஜல்லி கற்கள் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இரு குட்டைகளிலும், தண்ணீர் வற்றாமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றுப்பகுதியில் உள்ள, விவசாயி கிணறுகளுக்கு, தொடர்ச்சியாக நீர் ஊற்று கிடைத்து வருகிறது.இதனால்,மேலும் பல இடங்களில் உறிஞ்சு குழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X