பொது செய்தி

தமிழ்நாடு

கூலி உயர்வு பெற்றுத்தாருங்கள்: விசைத்தறியாளர்கள் முறையீடு

Added : நவ 22, 2021
Share
Advertisement
சோமனூர்:ஆறு மாதங்களாக நீடித்துவரும் கூலி உயர்வு பிரச்னைக்கு இரு மாவட்ட கலெக்டர்கள் தலையிட்டு தீர்வு காண விசைத்தறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனுாரில் நடந்தது. கூட்டத்தில், கடந்த ஆறு மாதங்களாக, 11 முறை பேச்சுவார்த்தை
 கூலி உயர்வு பெற்றுத்தாருங்கள்: விசைத்தறியாளர்கள் முறையீடு

சோமனூர்:ஆறு மாதங்களாக நீடித்துவரும் கூலி உயர்வு பிரச்னைக்கு இரு மாவட்ட கலெக்டர்கள் தலையிட்டு தீர்வு காண விசைத்தறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனுாரில் நடந்தது. கூட்டத்தில், கடந்த ஆறு மாதங்களாக, 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முன்னேற்றமும் இல்லை. நான்கு பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் முழுமையாக ஒரு முறை கூட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவில்லை. அனைத்துப் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களும் வரும் நாட்களில் நடக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு, விசைத்தறியாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.ஏற்கனவே, 25 சதவீத நஷ்டத்தில் தொழில் நடத்தி வருகிறோம். மேலும், காலம் தாழ்தினால், தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, விசைத்தறி தொழிலை பாதுகாக்க, அடுத்து நடக்கும் பேச்சுவார்த்தையில், அனைத்து பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களையும் வரவழைத்து, கூலி உயர்வை பெற்றுத்தர, இரு மாவட்ட கலெக்டர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X