பொது செய்தி

தமிழ்நாடு

நாற்று நடவு செய்த கல்லுாரி மாணவர்கள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு நிறுவனத்தில், படிக்கும் மாணவர்கள் நெல் நாற்று நடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.சரவணம்பட்டி, கவுமார மடாலயத்தில், கல்லுாரியின் இரண்டாம் ஆண்டு வேளாண்மை பட்டயப்படிப்பு மாணவர்கள், பயிர் உற்பத்தி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள நெல் பயிர் சாகுபடி குறித்த பயிற்சியில்
 நாற்று நடவு செய்த கல்லுாரி மாணவர்கள்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு நிறுவனத்தில், படிக்கும் மாணவர்கள் நெல் நாற்று நடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.சரவணம்பட்டி, கவுமார மடாலயத்தில், கல்லுாரியின் இரண்டாம் ஆண்டு வேளாண்மை பட்டயப்படிப்பு மாணவர்கள், பயிர் உற்பத்தி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள நெல் பயிர் சாகுபடி குறித்த பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியினை வேளாண்மை நிறுவனத்தின் செயலாளர் சுவாமி நாராயணந்தர் துவக்கி வைத்தார். பேராசிரியர்கள் கூறுகையில்,'விவசாய கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வியாக நின்றுவிடக்கூடாது. வயல்களில் உழவர்கள் பயிர் சாகுபடி செய்யும் அனுபவத்தை, மாணவர்கள் முழுமையாக பெறுவதோடு, அதில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது' என்றனர். கல்லூரி முதல்வர் சுகந்தராஜ், பேராசிரியர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X