பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஊழல்வாதிக்கு 'புனிதர்' பட்டமா?

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (69)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் லஞ்சம் வாங்கி கைதானோரின் பட்டியல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.இதில் முதல் மூன்று இடங்களை வருவாய், மின்சார மற்றும் காவல் துறையினர்
ஊழல்வாதி, புனிதர் பட்டம், லஞ்சம், மின்சாரம், காவல்த் துறை, வருவாய், இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் லஞ்சம் வாங்கி கைதானோரின் பட்டியல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.இதில் முதல் மூன்று இடங்களை வருவாய், மின்சார மற்றும் காவல் துறையினர் பெற்றுள்ளனர்.ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் வாங்காத நபர்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். நிலைமை அப்படி இருக்க, இப்பட்டியலில் சொற்ப எண்ணிக்கையில் தான் கைதானோர் எண்ணிக்கை உள்ளது; இன்னும் பல ஆயிரம் பேர் சிக்காமல் உள்ளனர்.

நான்கு ஆண்டுகளில் வருவாய்த்துறையில் மட்டும் லஞ்சம் வாங்கி கைதானோரின் எண்ணிக்கை வெறும், 43 தான். மாநிலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பலப்படுத்தப்பட்டு, நடுநிலையுடன் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தால், லஞ்ச அதிகாரிகள் ஆட்டம் காண்பர் என்பது உறுதி.லஞ்சத்துக்கு எதிராக, மாநில அரசு அப்படி தீவிரமாக நடவடிக்கை எடுக்க விரும்பாது. ஒவ்வொரு நாளும் அரசு ஊழியர்கள், 100 பேரை வீட்டுக்கு அனுப்பினால், நிர்வாகம் என்னாவது?


latest tamil news


வார்டு உறுப்பினர் முதல் அமைச்சர் வரை, அவர்கள் சார்ந்த துறையில் எப்படி எல்லாம் லஞ்சம் பெற முடியும் என்பதை நுணுக்கமாக கற்று கொடுப்போர், அதிகாரிகள் தான்.இப்போது எல்லாம் லஞ்சம் வாங்கி கையும், களவுமான கைதாகும் நபர் வெட்கப்படுவதில்லை; வேதனைப்படுவதில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் திரும்பவும் பணியில் சேர்ந்து விடலாம் என்பது அவர்களுக்கு தெரியும்.

அவர்கள், லஞ்சத்துடன் இரண்டறக் கலந்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.ஆட்சி மாறினாலும், அதிகாரிகள் மாறுவதே இல்லை. லஞ்சம் வாங்குபவர், 'புனிதர்' பட்டத்திற்கு தகுதி பெற்று விடுகின்றனர்!கடந்த 10 ஆண்டுகளில், வெறும் 604 பேருக்கு தான் லஞ்ச ஒழிப்புத் துறை தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது. இது தான் லஞ்ச ஒழிப்புத் துறையின், 'சாதனை!'

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
22-நவ-202121:42:47 IST Report Abuse
bal சிறையில் தண்டனை பெற்று வந்த சசி புரட்சி தாய் ஆகி விட்டார்..மக்களும் அவங்களை வரவேற்கின்றனர். மான அவமானம் என்பது நம் பண்பிலிருந்து சென்று விட்டது.
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
22-நவ-202121:35:37 IST Report Abuse
Sathyanarayanan Subramanian ஊழலும் அரசியலும் ஒழிக்க முடியாது. விஞ்ஞான ரீதியாக ஊழல் வழக்கில் தப்பித்தார் கூறும் வரலாறு. மக்கள் மறக்க முடியாது
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-நவ-202118:32:44 IST Report Abuse
வெகுளி திருட்டு திராவிடத்தை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது..... லஞ்சத்தின் ஊற்றுக்கண் ராபின்சன் பூங்காவில் தொடங்கியது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X