கொரோனாவுக்கு பெண் பலி| Dinamalar

கொரோனாவுக்கு பெண் பலி

Added : நவ 22, 2021
Share
புதுச்சேரி : கொரோனா தொற்றி னால் புதுச்சேரியில் 50 வயது பெண் உயிரிழந்தார்.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 2,099 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 32 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் தொற்று பாதித்த 50 வயது பெண், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு 1,870 ஆக

புதுச்சேரி : கொரோனா தொற்றி னால் புதுச்சேரியில் 50 வயது பெண் உயிரிழந்தார்.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 2,099 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 32 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் தொற்று பாதித்த 50 வயது பெண், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு 1,870 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 70 பேர், வீடுகளில் 253 பேர் என 323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தொற்றில் இருந்து 25 பேர் குணமடைந்தனர்.இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 7,37,461 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 4,38,287 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X