அகத்தீஸ்வரர் கோவில் குளம் பணி விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அகத்தீஸ்வரர் கோவில் குளம் பணி விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

Added : நவ 22, 2021
Share
வளசரவாக்கம் : பல மாதங்களாக தடைபட்டுள்ள அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வளசரவாக்கம், ஆற்காடு சாலையில், அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள இந்த கோவிலை ஒட்டி, திருக்குளம் அமைந்துள்ளது.குளத்திற்கு போதிய வரத்து கால்வாய் இல்லாததால், வறண்டு
 அகத்தீஸ்வரர் கோவில் குளம் பணி விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

வளசரவாக்கம் : பல மாதங்களாக தடைபட்டுள்ள அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளசரவாக்கம், ஆற்காடு சாலையில், அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள இந்த கோவிலை ஒட்டி, திருக்குளம் அமைந்துள்ளது.குளத்திற்கு போதிய வரத்து கால்வாய் இல்லாததால், வறண்டு காட்சியளித்தது. எனவே, வரத்து கால்வாய்கள் அமைத்து, குளத்தை துார் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாயின.

இதன் எதிரொலியாக, குளத்தில் மழை நீர் தேங்கும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.மேலும், 87 லட்சம் ரூபாய் மதிப்பில், குளத்தை துார் வாரி, கரையமைத்து, நடைபாதை, மின் விளக்குகள் அமைக்கும் பணிக்காக, மாநகராட்சி சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது.

இதையடுத்து, குளத்தை துார் வாரி கரையமைக்கும் பணிகள் நடந்தன. ஒப்பந்தப்படி இப்பணிகள், செப்டம்பர் மாதம், 30ம் தேதியுடன் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.இந்நிலையில், குளத்தை சீரமைக்கும் பணிகள் பல மாதங்களாக தடைபட்டுள்ளன. பருவ மழையால், குளம் நிரம்பியுள்ள நிலையில், குளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X