புதுச்சேரி : மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுச்சேரியில் மழை சேதங்களை ஆய்வு செய்ய, மத்திய குழு இன்று வருகை தர உள்ளது.
மழை பாதிப்பு நிவாரணமாக 300 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்த உள்ளார்.புதுச்சேரி, காரைக்காலில் வட கிழக்கு பருவ மழை கடந்த மாதம் 26ம் தேதி முதல் தீவிர மடைந்து, கனமழை பெய்து வருகிறது.
கடந்த 27 நாட்களில், புதுச்சேரி பிராந்தியத்தில் 944 மி.மீ., காரைக்காலில் 877 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.இதன் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் பிரதான ஆறுகள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் நிரம்பி, உபரிநீர் ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.விவசாய நிலங்களை வெள்ளம் மூழ்கடித்து, பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
கிராமப்புற பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த சம்பா நெல் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. மழையினால் சாலைகள், ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினை அனுப்ப வேண்டும் என கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தனர்.
தமிழகத்தில் மழை வெள்ள சேதத்தை பார்வையிட, மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். இக்குழுவினர் தமிழகத்தில் இரு குழுவாக பிரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதில் ஒரு குழு, நாகப்பட்டிணம் செல்லும் வழியில், புதுச்சேரியில் மழை பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, மத்திய குழுவினர் இன்று 22ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு, சென்னையில் இருந்து கார் மூலம் புதுச்சேரிக்கு புறப்படுகின்றனர்.மாலை 5.௦௦ மணிக்கு புதுச்சேரிக்கு வரும் மத்திய குழுவினரை, மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
பின், தலைமை செயலகத்தில், 6.௦௦ மணியளவில் அனைத்து துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவின் கலந்துரையாடுகின்றனர்.அப்போது புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் துறை வாரியாக மழை சேத விபரங்களை மத்திய குழுவிடம் பட்டியலிடப்பட உள்ளது.அதன் பிறகு, மத்திய குழுவினர் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை 6.45 மணியளவில் சந்தித்து பேச உள்ளனர்.அப்போது, புதுச்சேரியில் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை கணக்கிட்டு, 300 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என மாநில அரசு சார்பில் வலியுறுத்த, முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள் ளார்.அரசு சார்பில் சேத மதிப்பீடு அறிக்கையையும் மத்திய குழுவிடம் ஒப்படைக்க உள்ளார்.மத்திய குழுவினர் இரவு 7.௦௦ மணியளவில் கவர்னர் தமிழிசையை, ராஜ்நிவாசில் சந்தித்து கலந்துரையாடுகின்றனர்.
இரவு, அண்ணாமலை ஓட்டலில் மத்திய குழுவினர் தங்குகின்றனர். 23ம் தேதி காலை 8.30 மணியளவில் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பினை பார்வையிடுகின்றனர்.காலை 10.௦௦ மணி வரை புதுச்சேரியில் வில்லியனுார், பாகூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை சேதங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்ய உள்ளனர்.பின்னர், கடலுார் வழியாக நாகப்பட்டிணம் புறப் பட்டு செல்கின்றனர்.அதிகாரிகளுக்கு உத்தரவுமத்திய குழுவினர் தங்கும் அண்ணாமலை ஓட்டலில், 23ம் தேதி காலை 8.௦௦ மணிக்கு உள்ளாட்சி, பொதுப்பணி, வேளாண்மை, மின்சாரம், சுகாதாரம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட ஏழு துறை அதிகாரிகள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய குழுவின் புதுச்சேரி பயண அட்டவணை
22 ம்தேதி மாலை 5 மணி
புதுச்சேரி வருகை இரவு 6 மணி தலைமை செயலகத்தில் அனைத்து துறைகளுடன் கலந்துரையாடல் இரவு 6.45 மணி
முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு இரவு 7 மணி
கவர்னர் தமிழிசையுடன் சந்திப்பு இரவு 8 மணி
உணவு இரவு 8.30 மணி
அண்ணாமலை ஓட்டலில் தங்குதல் 23 ம்தேதி காலை 8 மணி
காலை உணவு காலை 8.30 மணி
ஆய்வு துவக்கம் காலை 11 மணி
கடலுார் பயணம்
வழிகாட்டி குழு
வெள்ள சேதத்தை மதிப்பீடு செய்ய வரும் மத்திய குழுவை வரவேற்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும், கலெக்டர் பூர்வா கார்க் தலைமை யில் நான்கு பேர் கொண்ட வழிகாட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொறுப்பு அதிகாரிகளாக வருவாய் துறை சார்பு செயலர் சுதாகர், வடக்கு சப் கலெக்டர் கந்தசாமி, பேரிடர் மேலாண் துறை துணை கலெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE