வாய்க்காலில் மாயமான டிரைவர்; 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வெள்ளவாரி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவரை தேடும் பணி நேற்று 2வது நாளாக நடந்தது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. 2 மணி நேரத்தில் 9.5 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. மழையால் மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வெள்ளவாரி வாய்க்காலில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தைச்

புதுச்சேரி : வெள்ளவாரி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவரை தேடும் பணி நேற்று 2வது நாளாக நடந்தது.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. 2 மணி நேரத்தில் 9.5 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. மழையால் மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வெள்ளவாரி வாய்க்காலில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்.கனகராஜ், 65; வெள்ளவாரி வாய்க்கால் ஓரமாக இருந்த தனது ஆட்டோவை மேடான பகுதியில் நிறுத்த முயன்றார். அப்போது வெள்ளவாரி வாய்க்காலில் அளவுக்கு அதிகமாக சென்ற தண்ணீரில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வாய்க்காலில் இறங்கி தேடியும் கனகராஜ் கிடைக்கவில்லை.நேற்று காலை 2வது நாளாக கனகராஜை தேடும் பணி நடந்தது. தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள் இணைந்து, வெள்ளவாரி வாய்க்கால், கனகன் ஏரி உள்ளிட்ட இடங்களில் தேடியும் கனகராஜை கண்டுபிடிக்க முடியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X