பொது செய்தி

தமிழ்நாடு

ஜனவரியில் உருவாகுது ‛தமிழ் காமன்வெல்த்'

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை--அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கும் தமிழ் கலாசார மாநாட்டில், 'தமிழ் காமன்வெல்த்' என்ற அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.உலக தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலக தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து, இந்தாண்டுக்கான தமிழ் கலாசார மாநாட்டை, சென்னை கலைவாணர் அரங்கில், ஜனவரி, 8, 9ம் தேதிகளில் நடத்துகின்றன.இதில், பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில்,

சென்னை--அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கும் தமிழ் கலாசார மாநாட்டில், 'தமிழ் காமன்வெல்த்' என்ற அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.



latest tamil news


உலக தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலக தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து, இந்தாண்டுக்கான தமிழ் கலாசார மாநாட்டை, சென்னை கலைவாணர் அரங்கில், ஜனவரி, 8, 9ம் தேதிகளில் நடத்துகின்றன.இதில், பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில், தமிழர்களின் கலை, கலாசாரம், உணவு உடை, அணிகலன், கல்வி உள்ளிட்டவை குறித்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன.

அடுத்த மாதம்இது குறித்து, உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் கூறியதாவது:உலகில் 152 நாடுகளில், தமிழ் வம்சாவழியை சார்ந்தோர் பிரதமர், துணை பிரதமர், ஜனாதிபதி, எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்ட பல்வேறு அரசியல் பதவிகளில் உள்ளனர். அவர்கள், அந்தந்த நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்களை இணைக்கும் விதமாக, உலக தமிழ் வம்சாவழி மாநாடு அடுத்த மாதம் நடக்கிறது. தமிழ் கலாசாரம், வர்த்தகம், கலை, சித்த மருத்துவம் உள்ளிட்டவற்றை பரப்பவும், உலக தமிழர்களை ஒருங்கிணைக்கவும் வசதியாக, தமிழ் காமன்வெல்த் என்ற அமைப்பு உருவாக்கப் பட உள்ளது.


latest tamil news


உலக தமிழ் பார்லி.,இதில், பல்வேறு நாடுகளில் இருந்து 764 பல்துறை வல்லுனர்கள்; 236 நாடுகளில் இருந்து, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பர்.இந்த அமைப்பின் வாயிலாக, உலக தமிழ் அறிஞர்கள், வர்த்தகர்கள், மருத்துவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, உலக தமிழ் பார்லிமென்ட் கூட்டம் நடத்தப்படும். அந்தந்த துறை வல்லுனர்கள், அவர்கள் சார்ந்த நாட்டின் துாதுவர்களாக செயலாற்றி, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவர். இந்த நிகழ்ச்சிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில் துறைகள் ஒருங்கிணைக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
22-நவ-202117:09:14 IST Report Abuse
jayvee திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ் கால்பந்தாகிவிடுகிறது
Rate this:
Cancel
Kannan Iyer - Bangalore,இந்தியா
22-நவ-202115:29:36 IST Report Abuse
Kannan Iyer அதென்ன தமிழ் "காமன்வெல்த்"? இவர்களுக்கு தமிழில் உரிய சொல் கிடைக்கவில்லையா?
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
22-நவ-202116:12:32 IST Report Abuse
Barakat Aliபிரிட்டிஷாரால் ஆளப்பட்ட / காலனியாக்கப்பட்ட நாடுகளை காமன்வெல்த் நாடுகள் என்று சொல்வாங்க நீங்கள் வெளியேறினால் இந்தியாவால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது வெளியேறவேண்டாம் என்று சொன்ன கும்பல் நாட்டில் இருந்தது (இப்பவும் இருக்கு) அந்த கும்பலின் இன்றைய தலைவர்கள் நடத்துவதுதான் இந்த மாநாடு...
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
22-நவ-202114:36:20 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் "இந்தாண்டுக்கான தமிழ் கலாசார மாநாட்டை, சென்னை கலைவாணர் அரங்கில், ஜனவரி, 8, 9ம் தேதிகளில் நடத்துகின்றன" முன்னாடியே சொல்லிடுறேன் என்னை பாராட்டி புகழ்மாலை சூட்டனும் இப்படிக்கு சூட்லர்
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
22-நவ-202115:48:43 IST Report Abuse
Barakat Aliஏற்பாடே நாங்கதான் தெரியும்ல? மொதல்ல எங்களுக்கு பிசினஸ் ஆரம்பிச்சி கொடுத்தவர் "வாங்கின" யுனெசுகோ விருது அப்புறம் மோதிரம் வாங்கி (அல்லது சுட்டு?) கொடுத்து போட்டுவிட சொன்னது எங்க பெருமை கொஞ்சமா நஞ்சமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X