சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறிப்பு; இளைஞர் கைது

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோயம்பேடு ; கோயம்பேடில் பயணியை மிரட்டி மொபைல் போன் பறித்தவரை, போலீசார் கைது செய்தனர்.திருமங்கலம், சத்ய சாய் நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வேலு, 41. இவர், நேற்று அதிகாலை, சொந்த ஊரான செஞ்சியில் இருந்து பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.இதையடுத்து, கோயம்பேடு புதிய மேம்பாலம், சர்வீஸ் சாலையில் மாநகர பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த மூன்று

கோயம்பேடு ; கோயம்பேடில் பயணியை மிரட்டி மொபைல் போன் பறித்தவரை, போலீசார் கைது செய்தனர்.திருமங்கலம், சத்ய சாய் நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வேலு, 41. இவர், நேற்று அதிகாலை, சொந்த ஊரான செஞ்சியில் இருந்து பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.

இதையடுத்து, கோயம்பேடு புதிய மேம்பாலம், சர்வீஸ் சாலையில் மாநகர பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள், அவரை மிரட்டி மொபைல் போன் பறித்து சென்றனர்.இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரித்தனர். இதில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்த ஆசிக் அலி அகமத், 19, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பாபு மற்றும் சங்கர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X