தமிழ்நாடு

'மெகா கிளீனிங்' முகாம்; கோடம்பாக்கத்தில் 100 கிலோ குப்பை அகற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோடம்பாக்கம், ; கோடம்பாக்கத்தில் நடந்த 'மெகா கிளீனிங்' முகாமில், 100 கிலோ குப்பை அகற்றப்பட்டது.'இந்திய விழிப்புணர்வு' அமைப்பு கோடம்பாக்கம், எக்ஸ்னோரா மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து, கோடம்பாக்கத்தில் நேற்று, 'மெகா கிளீனிங்'முகாமை நடத்தினர். இந்நிகழ்வில், கோடம்பாக்கம் அசீஸ் நகர் தெருக்களில், மழை வெள்ளத்தில் தேங்கிய குப்பையை அகற்றும்
 'மெகா கிளீனிங்' முகாம்;   கோடம்பாக்கத்தில் 100 கிலோ குப்பை அகற்றம்


கோடம்பாக்கம், ; கோடம்பாக்கத்தில் நடந்த 'மெகா கிளீனிங்' முகாமில், 100 கிலோ குப்பை அகற்றப்பட்டது.'இந்திய விழிப்புணர்வு' அமைப்பு கோடம்பாக்கம், எக்ஸ்னோரா மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து, கோடம்பாக்கத்தில் நேற்று, 'மெகா கிளீனிங்'முகாமை நடத்தினர்.

இந்நிகழ்வில், கோடம்பாக்கம் அசீஸ் நகர் தெருக்களில், மழை வெள்ளத்தில் தேங்கிய குப்பையை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.இதன் மூலம், 100 கிலோ குப்பை அகற்றப்பட்டது. மேலும், சாய்ந்து கிடந்த மரக்கிளைகளையும் வெட்டி அகற்றினர்.அசீஸ் நகரின் ஒரு பகுதியில் குவிக்கப்பட்ட குப்பை மற்றும் சேறு, சகதி ஆகியவற்றை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X