பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து சிறை கைதிக்கு கஞ்சா சப்ளை; காலாப்பட்டில் இருவர் சிக்கினர்

Added : நவ 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில், கைதிக்கு பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா கொடுத்த இருவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரியாங்குப் பத்தை சேர்ந்த அஜித் என்பவரை பார்க்க, அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகிய இருவர் நேற்று சிறைக்கு வந்தனர்.இருவரும், அஜித்திற்கு இரண்டு பிஸ்கட் பாக்கெட்


புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில், கைதிக்கு பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா கொடுத்த இருவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரியாங்குப் பத்தை சேர்ந்த அஜித் என்பவரை பார்க்க, அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகிய இருவர் நேற்று சிறைக்கு வந்தனர்.

இருவரும், அஜித்திற்கு இரண்டு பிஸ்கட் பாக்கெட் கொடுத்தனர். பாக்கெட் பெரிதாக இருந்ததால் சந்தேகமடைந்த சிறை காவலர்கள், அவற்றை பிரித்து பார்த்தனர். பிஸ்கட்டுகளுக்கு இடையே, சிறிய அளவில் நான்கு கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.அதைத் தொடர்ந்து, ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகிய இருவரையும் பிடித்து, காலாப்பட்டு போலீசில் கஞ்சாவுடன் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக, சிறையின் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X