பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பெண் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பெண் பலி

Added : நவ 22, 2021
Share
தாம்பரம் ; குரோம்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில், கணவனின் கண் முன்னே மனைவி பலியானார். தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர், அப்துல் வாஜித், 42. இவரது மனைவி அக் ஷயா பாத்திமா, 35.தம்பதியர் இருவம், நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, 'டி.வி.எஸ்., ஜுபிடர்' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர்.குரோம்பேட்டை பஸ்

தாம்பரம் ; குரோம்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில், கணவனின் கண் முன்னே மனைவி பலியானார்.

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர், அப்துல் வாஜித், 42. இவரது மனைவி அக் ஷயா பாத்திமா, 35.தம்பதியர் இருவம், நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, 'டி.வி.எஸ்., ஜுபிடர்' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர்.

குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே சென்ற போது, நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, கோயம்பேடில் இருந்து பெரம்பலுார் நோக்கி சென்ற அரசு பஸ், இருசக்கர வாகனத்தில் மோதியது. பஸ்சின் பின்சக்கரம், அக் ஷயா பாத்திமாவின் தலையில் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அப்துல் வாஜித், எலும்பு முறிவு காயங்களுடன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, பஸ் ஓட்டுனரான தட்சிணாமூர்த்தி, 46, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X