இந்தியா

செல்லிப்பட்டு படுகையணை உடைந்தது; தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருக்கனுார் : வீடூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணையின் நடுப்பகுதி முற்றிலும் உடைந்து, தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி கடலுக்கு செல்கிறது.புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் படுகை அணை


திருக்கனுார் : வீடூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணையின் நடுப்பகுதி முற்றிலும் உடைந்து, தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி கடலுக்கு செல்கிறது.

புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் படுகை அணை கட்டப்பட்டது.போதிய பராமரிப்பு இல்லாததால், கடந்த 2016ம் ஆண்டு பெய்த கனமழையால் படுகை அணை நடுபகுதியின் கீழ்தளம் சேதமடைந்தது

இந்நிலையில், தற்போதைய தொடர் கனமழையால் தமிழகப் பகுதியான வீடூர் அணையில் இருந்து சங்கராபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு, வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அனைத்து படுகை அணைகளும் மூழ்கின. இதில், செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணையில் சேதமடைந்த நடுப்பகுதி, நேற்று முன் தினம் பெருக்கெடுத்த வெள்ளத்தால் மேலும் உடைய துவங்கியது.நேற்று அதிகாலை 2:00 மணி அளவில், படுகை அணையின் சேதமடைந்த நடுப்பகுதி முழுமையாக உடைந்து, தண்ணீர் முற்றிலும் வெளியேறி வருகிறது.

இதனால் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக சங்கராபரணி ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அணை முழுமையாக உடைய பொதுப்பணித்துறை அதிகாரிகளே காரணம். சிறிய அளவில் அணை சேதமடைந்த போது சீரமைத்து இருந்தால், தற்போது அணை முழுமையாக உடைந்திருக்காது. இப்பகுதியில் புதிதாக அணை கட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, கூறி பழமையான அணை உடைவதற்கு காரணமாகியுள்ளனர்.

இதனால், படுகையணையை நம்பி விவசாயம் செய்து வந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுவர்.புதிய அணை கட்டும் பணியை விரைவில் துவங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X