பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் புகார்

Added : நவ 22, 2021
Share
Advertisement
செங்குன்றம் : கழிவுநீர் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஊராட்சி மன்ற நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, எம்.எல்.ஏ.,விடம் புகார் செய்தனர்.சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சியில் உள்ள மூங்கிலான் தெரு, இருசப்பன் தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியது. அங்குள்ள கால்வாய் அடைப்பும் அகற்றப்படவில்லை. இதனால், அந்த பகுதியில்

செங்குன்றம் : கழிவுநீர் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஊராட்சி மன்ற நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, எம்.எல்.ஏ.,விடம் புகார் செய்தனர்.

சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சியில் உள்ள மூங்கிலான் தெரு, இருசப்பன் தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியது. அங்குள்ள கால்வாய் அடைப்பும் அகற்றப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை, மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம், அங்கு சென்று பார்வையிட்டார்.அப்போது, அவர்கள், எம்.எல்.ஏ.,விடம், எங்கள் பகுதி பிரச்னை குறித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம், பல முறை புகார் செய்தோம். ஆனால், அவர்கள் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் செய்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ., ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களை அழைத்து, கண்டித்தார். உடனடியாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X