இந்தியா

பரோடா வங்கியின் வீட்டுக் கடன் முகாம்' ரூ.8.50 கோடிக்கு முன் அனுமதி வழங்கல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பரோடா வங்கியின் வீட்டுக் கடன் முகாமில், ரூ.8.50 கோடி அளவிலான கடனுக்கு முன் அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன.பரோடா வங்கி, முன்னணி பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த 'பிராப்பர்ட்டி எக்ஸ்போ - 2021' என்ற வீட்டுக் கடன் தொடர்பான இருநாள் கண்காட்சி, புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று இரண்டாவது

புதுச்சேரி : பரோடா வங்கியின் வீட்டுக் கடன் முகாமில், ரூ.8.50 கோடி அளவிலான கடனுக்கு முன் அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன.

பரோடா வங்கி, முன்னணி பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த 'பிராப்பர்ட்டி எக்ஸ்போ - 2021' என்ற வீட்டுக் கடன் தொடர்பான இருநாள் கண்காட்சி, புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கண்காட்சி மற்றும் வீட்டு கடன் முகாமில், வங்கி அலுவலர்கள் பயனாளிகளுக்கு உடனுக்குடன் கடன் முன் அனுமதி கடிதம் வழங்கினர்.

இரண்டு நாட்களில் 300 பேர் வீட்டு கடன் உள்பட பல்வேறு திட்டங்களில் பயன்பெற அணுகினர். முகாமில் 35 பயனாளிகளுக்கு ரூ.8.50 கோடி கடன் முன் அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன.கண்காட்சி நிறைவு விழாவில் வங்கியின் முதன்மை மேலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். வங்கியின் நெட் ஒர்க் பிரிவு துணை பொது மேலாளர் சலபதி நாயுடு தலைமை தாங்கினார்.

முகாமில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சீனியர் மேலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை வங்கி பிராந்திய மேலாளர் கண்ணன், துணை பிராந்திய மேலாளர் அமலசவுந்தரராஜ் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X