பேருந்து நிழற்குடையில் அழுகிய நாயால் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேருந்து நிழற்குடையில் அழுகிய நாயால் அவதி

Added : நவ 22, 2021
Share
செங்குன்றம், : மூன்று நாட்களுக்கு முன் இறந்து, அழுகிக் கிடந்த நாயின் உடலை அகற்றாத உள்ளாட்சி நிர்வாகத்தால், பொதுமக்கள் சுகாதார பாதிப்பிற்கு ஆளாகினர்.சென்னை ஆவடி அடுத்த வெள்ளானுார் ஊராட்சி, செங்குன்றம்- - ஆவடி பிரதான சாலையில், அமிர்தாபுரம் கிராமம் உள்ளது. அங்குள்ள, மாநகர பேருந்து நிழற்குடையில், அழுகிய நாயின் உடல், கடந்த மூன்று நாட்களாக கிடந்தது. அதனால், துர்நாற்றம்

செங்குன்றம், : மூன்று நாட்களுக்கு முன் இறந்து, அழுகிக் கிடந்த நாயின் உடலை அகற்றாத உள்ளாட்சி நிர்வாகத்தால், பொதுமக்கள் சுகாதார பாதிப்பிற்கு ஆளாகினர்.

சென்னை ஆவடி அடுத்த வெள்ளானுார் ஊராட்சி, செங்குன்றம்- - ஆவடி பிரதான சாலையில், அமிர்தாபுரம் கிராமம் உள்ளது. அங்குள்ள, மாநகர பேருந்து நிழற்குடையில், அழுகிய நாயின் உடல், கடந்த மூன்று நாட்களாக கிடந்தது. அதனால், துர்நாற்றம் வீசியது. பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் அங்கு நிற்க முடியாமல் சிரமப்பட்டனர்.இது குறித்து, ஊராட்சி மன்றம் மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றுக்கு புகார் செய்தனர்.

ஆனாலும், நேற்று காலை வரை அகற்றப்படவில்லை. டெங்கு, மர்ம காய்ச்சல் என நோய் தொற்று பரவும் நிலையில், அழுகிய நாயின் உடல், 3 நாட்களாக அகற்றப்படாததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள், மேற்கண்ட பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து, நேற்று மாலை, அழுகிய நாயின் உடல் அகற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X