தமிழ்நாடு

வெள்ளத்தில் மிதக்கும் மணலி புதுநகர் குடியிருப்புகள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
மணலிபுதுநகர் : கொசஸ்தலை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ள நீர், மணலிபுதுநகரின் பெரும்பாலான வீடுகளை மூழ்கடித்துள்ளது. சடையங்குப்பம் - பர்மா நகர் பகுதிகள், இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், வடசென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் கன மழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, நீர் வரத்து
 வெள்ளத்தில் மிதக்கும் மணலி  புதுநகர் குடியிருப்புகள்

மணலிபுதுநகர் : கொசஸ்தலை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ள நீர், மணலிபுதுநகரின் பெரும்பாலான வீடுகளை மூழ்கடித்துள்ளது.

சடையங்குப்பம் - பர்மா நகர் பகுதிகள், இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், வடசென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் கன மழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, நீர் வரத்து அதிகரிக்க துவங்கியதால், உபரி நீர் திறப்பும் படிப்படியாக உயர்த்தப்பட்டது

.இரு தினங்களுக்கு முன், வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர், பல கி.மீ., துாரம் பயணித்து நாப்பாளையம், மணலிபுதுநகர், இடையஞ்சாவடி, சடையங்குப்பம் அருகே, புழல் உபரி நீருடன் இணைந்து, எண்ணுார் முகத்துவாரத்தில் கடலில் கலக்கும்.அதிகப்படியாக திறக்கப்பட்ட உபரி நீரால், கொசஸ்தலை ஆற்றில், இரு தினங்களாக வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதனால், மணலிபுதுநகருக்குள் இருந்து, கொசஸ்தலை ஆற்றில் இணையும் கால்வாயில் உபரி நீர் பின்னோக்கி ஏறி, மணலிபுதுநகர் பிரதான சாலையை மூழ்கடித்தது.நேற்று முன்தினத்தைக் காட்டிலும், நேற்று ஊருக்குள் புகும் உபரி நீரின் அளவு அதிகரித்தது. பிரதான சாலையை ஒட்டிய குடிசைகள், அரசு உயர்நிலைப் பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி, காவல் நிலையம், ஆரம்பசுகாதார நிலையம் கட்டடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் வாசல் வரை, வெள்ள நீர் ஆர்ப்பரிக்கிறது. தவிர, ஆங்காங்கே ஆறுடன் இணையும் இணைப்பு கால்வாய் வழியாக, உபரி நீர் பின்னோக்கி ஏறி, பல நகர்களை மூழ்கடித்து உள்ளது.அதன்படி, ஐ.ஜே., புரம், இரண்டு தெருக்களிலும் மார்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. விச்சூர் ஒரு பகுதி, அருள் முருகன் நகர், ஸ்ரீராம் நகர் போன்ற பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.மின்சாரம் இல்லைகரை பலவீனத்தால் வடிவுடையம்மன் நகர், மகாலட்சுமி நகர், ராமலட்சுமி நகர், காந்தி நகர், எழில் நகர், எம்.ஆர்.பி., நகர், கணபதி நகர், 57, 58, 220, 227 பிளாக், பிரதான சாலைகளில் வெள்ள நீர் மேற்கு புறமாக ஊருக்குள் புகுந்து, கிழக்கு புறமாக பாய்ந்து, கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் கலக்கிறது.தொடர்ந்து, மூன்றாவது நாளாக, நாப்பாளையம் மேம்பாலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளன.கொசஸ்தலை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ள நீர், புழல் உபரி கால்வாயில் பின்னோக்கி ஏறியதால், சடையங்குப்பம் - பர்மா நகரை, உபரி நீர் சூழ்ந்துஉள்ளது.இதனால், சடையங்குப்பம் மேம்பால வழி, பர்மா நகர் இரும்பு பாலம் வழி, ௧௦ நாட்களுக்கும் மேலாக துண்டிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது வழியான வைக்காடு சந்திப்பு சாலையில், இரு இடங்களில் கொசஸ்தலை உபரி நீர், 2 அடி உயரத்திற்கு தேங்கி உள்ளது.

இதனால், இரு கிராமங்களுக்கும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ள நீர் சூழ்ந்ததால், நான்கு நாட்களாக, இப்பகுதிகளில் மின்சாரம் வினியோகிக்கப் படவில்லை.படகு போக்குவரத்து மூலம் வெளியே சென்று வரும் சூழல் நீடிக்கிறது. நேற்று முன்தினம் இரவு, உச்சபட்சமாக வெள்ள நீர் ஏறிய நிலையில், நேற்று மதியத்திற்குப் பின், ஆமை வேகத்தில் மெல்ல வடிய துவங்கியுள்ளது.வெள்ளத்தில், இணைப்பு கால்வாயோரம் உள்ள எங்கள் குடிசை வீடு மூழ்குவது வாடிக்கையாக உள்ளது

. உடைமைகள், உணவு பொருட்கள், ஆவணங்களை பத்திரப்படுத்த முடியவில்லை. கரையோரம் வசிக்கும் எங்களுக்கு, அரசு மாற்று இடம் வழங்க வேண்டும். கால்வாயை பெரிதாக்கி, கரையை பலப்படுத்த வேண்டும். வெள்ளத்தில், மணலிபுதுநகர் பாதிக்காமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

.டி.பாக்கியம், 33, இல்லத்தரசி,மசூதி குடிசை பகுதி, மணலிபுதுநகர்.கண் இமைக்கும் நேரத்தில், மளமளவென ஏறிய உபரி நீரால், மணலிபுதுநகரின் பெரும்பான்மை வீடுகளின் தரைத்தளத்தில் வெள்ள நீர் புகுந்து விட்டது. நேற்று முன்தினத்தை விட, நேற்றைய பாதிப்பு அதிகம். தற்போது, மெல்ல வெள்ள நீர் வடிவது போல தெரிகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், மணலிபுதுநகர் பாதிக்கப்படுகிறது.

நிரந்த தீர்வு காண வேண்டும்.எ.சகிலா, 48, இல்லத்தரசி, மணலிபுதுநகர்எங்களுக்கு பூர்வீகமே சடையங்குப்பம் தான். ஏரிகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இம்முறை, கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கால், பல குடியிருப்புகளில் வெள்ள நீர் ஏறியது. பலர், நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

எங்களிடம் மாடுகள் உள்ளதால், விட்டுச் செல்ல முடியவில்லை. ஊரை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மாடுகளுக்கு தீவனம் வாங்கி வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆர்.நீலாவதி, 50, இல்லத்தரசி, சடையங்குப்பம், மணலி.ஊரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை நிறுத்தி உள்ளனர். மின்சாரம் இல்லாததாலும், நீர்மட்டம் அதிகரிக்குமோ என்ற அச்சத்தாலும், துாங்க முடியவில்லை.

உயிர் பலி ஏற்படக் கூடாது என்பதற்காக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதை அறிவோம். உணவு மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. எனவே பாய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தால் சமாளிக்க முடியும்.டி.சுசீலா, 51, இல்லத்தரசி,சடையங்குப்பம், மணலி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X