பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவானவர், கோயம்புத்துாரில் போலீசாரிடம் நேற்று சிக்கினார்.
கடலுார் மாவட்டம் பண்ரூட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், 30; வேன் ஓட்டுனர். இவரது மனைவி நந்தினி, 27. தம்பதிக்கு, ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.கடந்த 20 நாட்களுக்கு முன், பூந்தமல்லி, கிழக்கு மாட வீதியில், ஆனந்தராஜ் குடும்பத்துடன் வாடகைக்கு குடி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி, அந்த வீட்டில் நந்தினி தாலியால் கழுத்து இறுக்கப்பட்டும், கட்டையால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆனந்தராஜ் மூன்று குழந்தைகளுடன் தலைமறைவாகி இருந்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி போலீசார், தனிப்படைகள் அமைத்து ஆனந்தராஜை தேடி வந்தனர்.இந்நிலையில், கோயம்புத்துாரில் பதுங்கி இருந்த அவரை, நேற்று பிடித்து வந்து விசாரித்தனர்.அப்போது, ஆனந்தராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:நான், கடலுாரில் இருந்தபோது, ஒரு பெண்ணை காதலித்து வந்தேன்.
+அப்போது எழுந்த குடும்ப பிரச்னை காரணமாக, அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக என் மீதும், என் மனைவி மற்றும் என் தாய் மீதும், புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதில், என் தாயை மட்டும் போலீசார் கைது செய்தனர். இதனால், நான் குடும்பத்துடன் அங்கிருந்து தப்பி, பூந்தமல்லிக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தேன். அப்போது, நான் காதலித்த பெண் தற்கொலை தொடர்பாக, மனைவி நந்தினிக்கும் எனக்கும் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தகராறு முற்றியதில், நந்தினியை கட்டையால் தலையில் தாக்கி, பின், தாலியால் கழுத்தை இறுக்கி கொலை செய்து தப்பினேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து, ஆனந்தராஜை போலீசார், கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE