சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வறுமையின் கொடுமையால் 3 மகள்களின் தாய் தற்கொலை

Added : நவ 22, 2021
Share
Advertisement
தரமணி : வறுமையின் கொடுமையால், மூன்று மகள்களை வளர்க்க முடியாமல் தவித்த பெண், தற்கொலை செய்து கொண்டார்.தரமணி, அகஸ்தியர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 42; ஆட்டோ ஓட்டுனர். மனைவி பரிமளா, 38. தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளன. போதிய வருமானம் இல்லாததால், மூவரையும் படிக்க வைக்க முடியாமலும், சத்தான உணவு கொடுக்க முடியாமலும் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இரு தினங்களுக்குமுன்,

தரமணி : வறுமையின் கொடுமையால், மூன்று மகள்களை வளர்க்க முடியாமல் தவித்த பெண், தற்கொலை செய்து கொண்டார்.

தரமணி, அகஸ்தியர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 42; ஆட்டோ ஓட்டுனர். மனைவி பரிமளா, 38. தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளன. போதிய வருமானம் இல்லாததால், மூவரையும் படிக்க வைக்க முடியாமலும், சத்தான உணவு கொடுக்க முடியாமலும் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இரு தினங்களுக்குமுன், மூன்றாவது மகள் பூப்பெய்தினாள்.இந்த சூழ்நிலையில் குடும்ப வறுமை நிலை குறித்து கணவருடன் வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

இதில், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், 'ஐந்து பேரும் சேர்ந்து, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்' என, பரிமளா கூறி உள்ளார். இதற்கு, பாலசுப்பிரமணி சம்மதிக்க மறுத்துள்ளார். இரவு அனைவரும் துாங்க சென்றனர். இந்நிலையில், நள்ளிரவு பரிமளா மட்டும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, தரமணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X