பொது செய்தி

தமிழ்நாடு

ரிசர்வ் வங்கி பாலம் சீரமைக்கப்படும்: அமைச்சர்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பிராட்வே, : ''காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அழகுபடுத்தப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மணலி செல்லும் வழியில், ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ்
 ரிசர்வ் வங்கி பாலம் சீரமைக்கப்படும்: அமைச்சர்

பிராட்வே, : ''காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அழகுபடுத்தப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மணலி செல்லும் வழியில், ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையை பார்த்து உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.அந்த வகையில், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையார் ககன்தீப்சிங் பேடி ஆகியோர், இந்த சுரங்கப்பாதையை நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அழகுபடுத்தப்படும்.சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த காலங்களில் சிறு மழைக்கே வியாசர்பாடி, கன்னிகாபுரம் சுரங்கப்பாதை மூடப்படும்.மழை ஓய்ந்து 4 நாட்களுக்குப் பின் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் நிலை இருந்தது. ஆனால் இம்முறை, அரசின் நடவடிக்கையால் மூழ்கிய அனைத்து சுரங்கப்பாதைகளும் துரிதமாக மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

மேலும் அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால்கள், மழை நீர் சென்று சேரவேண்டிய இடம் குறித்த திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றை எல்லாம் சீரமைத்து துார் வாரும் பணிகள் துரிதமாக நடக்கின்றன. மேலும் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மழை நீர் வடிகால் அமைக்கப்படும். நிதி நெருக்கடி இருந்தாலும், சென்னையை 'சிங்கார சென்னை 2.0'வாக நிச்சயம் மாற்றிக் காட்டுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X