டி.ஜி.பி.,யை சந்தித்து முதல்வர் நலம் விசாரிப்பு | Dinamalar

இந்தியா

டி.ஜி.பி.,யை சந்தித்து முதல்வர் நலம் விசாரிப்பு

Added : நவ 22, 2021
Share
புதுச்சேரி : சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டி.ஜி.பி.,யை முதல்வர் ரங்கசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா, உடல்நல குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் டி.ஜி.பி.யை, முதல்வர் ரங்கசாமி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
 டி.ஜி.பி.,யை சந்தித்து  முதல்வர் நலம் விசாரிப்பு

புதுச்சேரி : சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டி.ஜி.பி.,யை முதல்வர் ரங்கசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா, உடல்நல குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் டி.ஜி.பி.யை, முதல்வர் ரங்கசாமி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நேற்று மாலை சிகிச்சையில் உள்ள டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X