பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பை சூழ்ந்த கழிவு நீர் வீடுகளை காலி செய்யும் மக்கள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பூந்தமல்லி, நவ. 22-பூந்தமல்லியில், கழிவு நீர் வெளியேறி குடியிருப்புகளில் தேங்கியுள்ளதால், மக்கள் வீடுகளை காலி செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு, எம்.ஜி.ஆர்., நகர் குட்டையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தொடர் மழையில், இந்த வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.நகராட்சி நிர்வாகத்தினர் மோட்டார்கள் வாயிலாக மழை

பூந்தமல்லி, நவ. 22-பூந்தமல்லியில், கழிவு நீர் வெளியேறி குடியிருப்புகளில் தேங்கியுள்ளதால், மக்கள் வீடுகளை காலி செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு, எம்.ஜி.ஆர்., நகர் குட்டையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தொடர் மழையில், இந்த வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.நகராட்சி நிர்வாகத்தினர் மோட்டார்கள் வாயிலாக மழை நீரை, மற்றொரு பகுதியில் விடுகின்றனர். அப்படி விடப்படும் மழை நீர், குமணன்சாவடியில் உள்ள குட்டையில் கலக்கிறது.இக்குட்டையில் ஏற்கனவே கழிவு நீர் நிரம்பிஉள்ளது. தற்போது, மழைநீர் கலப்பதால், கழிவு நீர் வெளியேறி, அருகேயுள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளில் புகுந்துள்ளது. இதனால், அங்கு வசிப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

துர்நாற்றம், கொசு தொல்லை தாங்க முடியாததால், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு, உறவினர் வீடுகளில் தஞ்சம் அடையும் சூழல் நிலவுகிறது.இது குறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:கழிவு நீரின் துர்நாற்றத்தை தாங்கவே முடியவில்லை. இது குறித்து, நகராட்சியில் கேட்டால், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் விடுகிறோம் என அலட்சியமாக கூறுகின்றனர். ஒரு பகுதி மக்களின் நலனுக்காக, மற்றொரு பகுதி மக்களை வஞ்சிப்பது நியாயம் இல்லை. பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட அனைத்து குட்டைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இனியாவது, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X