வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில்

Added : நவ 22, 2021
Share
செம்மஞ்சேரி : செம்மஞ்சேரியில் உள்ள ஜவகர் நகர், எழில் நகர் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில், தண்ணீரில் நின்று மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.சோழிங்கநல்லுார் மண்டலம் 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், எழில் நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒட்டியம்பாக்கம் மேடவாக்கம், காரணை போன்ற பகுதிகளில் உள்ள ஏரி

செம்மஞ்சேரி : செம்மஞ்சேரியில் உள்ள ஜவகர் நகர், எழில் நகர் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில், தண்ணீரில் நின்று மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.

சோழிங்கநல்லுார் மண்டலம் 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், எழில் நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒட்டியம்பாக்கம் மேடவாக்கம், காரணை போன்ற பகுதிகளில் உள்ள ஏரி உபரிநீர், செம்மஞ்சேரி வழியாக ஒக்கியம்மடு செல்கிறது.அதேபோல், ஓ.எம்.ஆர்., வாணியம்சாவடி பகுதியில் உள்ள நீர்வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதால்,

நாவலுார், ஏகாத்துார், முட்டுக்காடு ஆகிய ஊராட்சிகளில் வடியும் மழை நீரும், செம்மஞ்சேரி வழியாக, ஒக்கியம்மடு செல்கிறது.இதனால், ஜவகர் நகர், எழில் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையை ஒட்டி உள்ளதால், வெள்ள தடுப்பு நடவடிக்கையில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மழையால், ஜவகர் நகர், எழில் நகரில் ஒன்பது நாட்களாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மின்வினியோகம் சீர்செய்யப்பட்டது.

இருந்தாலும், மின்கம்பி பழுதடைந்து, சில தெருக்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.மழை நின்றாலும், நேற்று, சில இடங்களில், இரண்டு முதல் மூன்று அடி வரை மழை நீர் தேங்கி நின்றது.பகுதிமக்கள் உதவியுடன், தேங்கிய மழைநீரில் நின்று, மின் கம்பி சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.இரண்டு மணி நேரம், மழைநீரில் நின்று கம்பிகளை சரி செய்தனர்.இதன் மூலம், ஜவகர் நகர், எழில் நகரில் மின்வினியோகம் சீரானது. அதே வேளையில், மழை நீர் வடிய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X