புதுச்சேரி கடலில் மூழ்கி சேலம் வாலிபர் பலி; ஒருவர் 'அட்மிட்'

Added : நவ 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி கடலில் குளித்த சேலம் வாலிபர், அலையில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சேலம், எடப்பாடி தாலுகா கெங்கனாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் கவுதம், 21; டிப்ளமோ படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சஞ்சய், 20; கூரியர் டெலிவரி ஊழியர்.இருவரும் நண்பர்கள் 10 பேருடன் நேற்று முன்தினம்


புதுச்சேரி : புதுச்சேரி கடலில் குளித்த சேலம் வாலிபர், அலையில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சேலம், எடப்பாடி தாலுகா கெங்கனாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் கவுதம், 21; டிப்ளமோ படித்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சஞ்சய், 20; கூரியர் டெலிவரி ஊழியர்.இருவரும் நண்பர்கள் 10 பேருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்து, கடற்கரையோரம் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.நேற்று மதியம் 2:30 மணிக்கு, பழைய துறைமுகம் சீகல்ஸ் உணவகம் பின்புறம் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது ராட்சத அலையில் கவுதம், சஞ்சய் இருவரும் இழுத்து செல்லப்பட்டனர். உடன் குளித்த நண்பர்கள், காப்பாற்றுமாறு சத்தம் எழுப்பினர். கரையில் இருந்த பொதுமக்கள் மற்றும் நீச்சல் தெரிந்த அவரது நண்பர்கள் சேர்ந்து, அலையில் சிக்கிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.பேச்சு மூச்சின்றி இருந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவுதம் உயிரிழந்தார். சஞ்சய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X