பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் வெள்ளம் சூழ்ந்த நகர பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.தென்பெண்ணையாற்றில் கடந்த 18 ம் தேதி 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், கடலுார் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களான அழகியநத்தம், நத்தப்பட்டு, பட்டாம்பாக்கம், புலவனுார், மேல்குமாரமங்கலம், நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, பெரியகங்கணாங்குப்பம் உள்ளிட்ட

கடலுார் : கடலுாரில் வெள்ளம் சூழ்ந்த நகர பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.தென்பெண்ணையாற்றில் கடந்த 18 ம் தேதி 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், கடலுார் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களான

அழகியநத்தம், நத்தப்பட்டு, பட்டாம்பாக்கம், புலவனுார், மேல்குமாரமங்கலம், நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, பெரியகங்கணாங்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் உட்புகுந்தது. இதனால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தீவாக மாறியது. ஆற்றின் கரைகள் உடைந்தும், கரையை தாண்டியும் தண்ணீர் நகர் பகுதிக்குள் புகுந்தது. இதனால் பண்ருட்டியில் துவங்கி கடலுார் வரை ஆற்றங்கரையோர

நுாற்றுக்கணக்கான நகர் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். நேற்று மூன்றாம் நாளாக பல்வேறு நகர் பகுதிகளில் தண்ணீர் வடியாமல் குளமாக தேங்கியது. கடலுார் குறிஞ்சி நகர், வெளி செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் ஏற்படுத்தி, தண்ணீர் வடிய வழி செய்யப்பட்டது. அத்துடன் தண்ணீர் வடிந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடன் தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X