புவனகிரி, நவ. 22-
புவனகிரியில் மகான் ராகவேந்திர சுவாமிகள் அவதார இல்லம், புதுப்பிக்கப்பட்ட மூலஸ்தான கருங்கல் மண்டபம், பக்தர்கள்தங்கும் விடுதி, அன்னதான மண்டபம், ஆலய தோரண வாயில்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பள்ளி ஆகியவை புதிதாக கட்டப்பட்டு கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. தினம் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பகல் 12.00 மணிக்கு புண்ணிய பூஜ்யஸ்ரீ மடாதிபதி ஸ்ரீஸ்ரீ 1008 சுதேந்திர தீர்த்த சுவாமிகள் கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை ஆஸ்தான அர்ச்சகர் ரகு ஆச்சாரியர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சின்னையன், பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.அருள், கீரப்பாளையம் சேர்மன் கனிமொழி தேவதாஸ்படையாண்டவர், வெள்ளியம்பலம் நகைக்கடை உரிமையாளர் ரத்தின சுப்பிரமணியன், அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாக இயக்குனர் முத்துக்குமரன் பங்கேற்றனர்.மேலும் கே.பி.பட்டு மகால் ஜெகன், கே.பி.டெக்ஸ் பாலமுருகன், முன்னாள் துணை சேர்மன் ராம்குமார், அபிராமிபட்டுகடை பன்னீர்செல்வம்.அபிராமி பட்டு மகால் ராணிபன்னீர்செலம், ஸ்டார் மெட்டல் ஹபிப்ரகுமான், ராஜேஸ்வரி சில்க்ஸ் சண்முகம், வெங்கடேஸ்வரா சில்க்ஸ் வெங்கடேசன், விஜய்கணினி மைய உரிமையாளர் விஜய்பிரபு, சுரேந்திரன் ஆனந்தம் கிளிக் டாக்டர் அனந்தநாயகி, நளினி சில்க்ஸ் சேஷாத்திரி, வள்ளலார் பட்டு அசோக்குமார், மகாராஜா பட்டு பாலு, சாமுண்டீஸ்வரி பேங்கர்ஸ் சரவணன் தரிசனம் செய்தனர். அழிச்சிக்குடி ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி கலியமூர்த்தி, முன்னாள் துணைத் தலைவர் சாரங்கபாணி, ஆறுமுகம் ஜூவல்லரி மற்றும் பட்டுக்கடை முருகவேல், செண்பகம் டிரேடர்ஸ் ரமேஷ், முருகன் டிரேடர்ஸ் ராகுல்பாலையா, பாரதியார் பட்டு மகால் பாலு உட்பட பலர் தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE