திருத்தணியில் கண் சிகிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் கண் சிகிச்சை

Added : நவ 22, 2021
Share
திருத்தணி : திருத்தணி தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், திருத்தணி ரோட்டரி சங்கம், பம்மல் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.ரோட்டரி சங்க செயலர் லோகேஷ் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் பாலாஜி, முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பம்மல் கண் மருத்துவமனையில் இருந்து, மருத்துவர்கள், மருத்துவ

திருத்தணி : திருத்தணி தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், திருத்தணி ரோட்டரி சங்கம், பம்மல் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.ரோட்டரி சங்க செயலர் லோகேஷ் தலைமை வகித்தார்.

பள்ளி தாளாளர் பாலாஜி, முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பம்மல் கண் மருத்துவமனையில் இருந்து, மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 57 பேருக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பரிசோதனைகள் செய்தனர்.இதில், 34 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்பட்டன.கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாகன வசதி, உணவு வசதி மற்றும் மருத்துவமனையில் இருந்து திரும்பி வரும் வரை அனைத்து செலவுகளும், ரோட்டரி சங்கம் ஏற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X