விருத்தாசலம் : சின்னவடவாடி ஏரி நிரம்பி உபரி நீர் மதகுகள் வழியே வெளியேறுவதால் 20 கிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சின்னவடவாடி ஏரி பாசனம் மூலம் சின்னவடவாடி, எ.வடக்குப்பம், எருமனுார், வயலுார், செம்பளக் குறிச்சி, நாச்சியார்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் 2,000 ஏக்கர் பரப்பளவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பா சாகுபடி செய்வது வழக்கம்.
மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், சின்னவடவாடி ஏரி நிரம்பி, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறுகிறது. இதனால், சம்பா சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். விழல் மற்றும் நெய்வேலி காட்டாமணிகள் அதிகளவில் மண்டி ஏரி துார்ந்து, அறுவடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. விழல் மற்றும் நெய்வேலி காட்டாமணிகளை அகற்றி, ஏரியை ஆழப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE