கலைத் திருவிழாவில் மாணவி சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலைத் திருவிழாவில் மாணவி சாதனை

Added : நவ 22, 2021
Share
ஸ்ரீபெரும்புதுார், : மாநில அளவில் நடந்த கலைத் திருவிழாவில், காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளி மாணவி, முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார்.தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், சேலத்தில், கலா உச்சவ் என்னும் கலைத் திருவிழா நடந்தது.மாநில அளவில் நடந்த இந்த கலைத் திருவிழாவில், 37 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த

ஸ்ரீபெரும்புதுார், : மாநில அளவில் நடந்த கலைத் திருவிழாவில், காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளி மாணவி, முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார்.தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், சேலத்தில், கலா உச்சவ் என்னும் கலைத் திருவிழா நடந்தது

.மாநில அளவில் நடந்த இந்த கலைத் திருவிழாவில், 37 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 666 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.இதில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் தனியார் பள்ளியைச் சேர்நத பத்தாம் வகுப்பு மாணவி யாழினி, 15, நாட்டுப் புறப்பாடல் வகையில், தமிழக அளவில் முதலிடம் பெற்றார்.மேலும், தேசிய அளவில் டில்லியில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்க உள்ளார் என, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X