பொது செய்தி

தமிழ்நாடு

டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த தொழிற்சாலை பேருந்து

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார், நவ. 22--ஸ்ரீபெரும்புதுார் அருகே, டயர் வெடித்து தொழிற்சாலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் புகுந்தது.ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் சிப்காட்டில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றி கொண்டு ஒரகடம் நோக்கி தொழிற்சாலை பேருந்து நேற்று காலை சென்றது.ஸ்ரீபெரும்புதுார் -

ஸ்ரீபெரும்புதுார், நவ. 22--ஸ்ரீபெரும்புதுார் அருகே, டயர் வெடித்து தொழிற்சாலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் புகுந்தது.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் சிப்காட்டில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றி கொண்டு ஒரகடம் நோக்கி தொழிற்சாலை பேருந்து நேற்று காலை சென்றது.ஸ்ரீபெரும்புதுார் - -ஒரகடம் சாலையில், வல்லம் பகுதியை கடந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.

இதில், ஒட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது மோதி நின்றது.இதில், பேக்கரி மற்றும் இறைச்சி கடையின் முன்பக்க பகுதி சேதமானது. அதிஷ்ட வசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.ஓட்டுனருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X