சிதிலமடைந்த வகுப்பறை; அச்சத்தில் மாணவர்கள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிதிலமடைந்த வகுப்பறையில் மாணவர்கள் அச்சத்துடன் பயிலும் அவலம் நிலவுகிறது.இப்பள்ளி முப்பதாண்டுகளாக கான்கிரீட், ஓட்டுக்கட்டடத்தில் செயல்படுகிறது. தற்போது 70 மாணவர்கள் படிக்கின்றனர். கட்டடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.பெற்றோர் முருகேசன் கூறியதாவது: பள்ளி மேல் தளத்தில்
 சிதிலமடைந்த வகுப்பறை; அச்சத்தில் மாணவர்கள்

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிதிலமடைந்த வகுப்பறையில் மாணவர்கள் அச்சத்துடன் பயிலும் அவலம் நிலவுகிறது.

இப்பள்ளி முப்பதாண்டுகளாக கான்கிரீட், ஓட்டுக்கட்டடத்தில் செயல்படுகிறது. தற்போது 70 மாணவர்கள் படிக்கின்றனர். கட்டடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.

பெற்றோர் முருகேசன் கூறியதாவது: பள்ளி மேல் தளத்தில் ஏற்பட்ட வெடிப்புகள் வழியாக தண்ணீர் வடிந்து மாணவர்கள் மீது விழுகிறது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியில் நீட்டிக் கொண்டுள்ளன. கட்டடம் முற்றிலும் பழுதுதடைந்துள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளது என்றார்.

பி.டி.ஒ., செல்லபாண்டியன் கூறியதாவது: பள்ளி கட்டடத்தை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் கட்டடம் சீரமைக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X