தமிழ்நாடு

உரத்தட்டுப்பாடால் நெல் விவசாயிகள் பாதிப்பு! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
தேனி : தேனி, சின்னமனுார் பகுதி நெல் விவசாயிகள் உரத்தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான உரங்களை வாங்கி கையிருப்பு வைக்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் இருபோக நெல் சாகுபடி செய்கின்றனர். ஆனால் சின்னமனுார் முதல் வைகை

தேனி : தேனி, சின்னமனுார் பகுதி நெல் விவசாயிகள் உரத்தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான உரங்களை வாங்கி கையிருப்பு வைக்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் இருபோக நெல் சாகுபடி செய்கின்றனர். ஆனால் சின்னமனுார் முதல் வைகை அணையின் நீர்த்தேக்க பகுதி வரையிலான விவசாயிகள் முதல் போக நெல் நடவு பணிகளை தற்போதுதான் துவக்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 16 நாட்களாக உரக்கடைகளில் நெற்பயிருக்கான அடி உரம் யூரியா விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், நடவு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில் நெற்பயிர் மட்டுமின்றி அனைத்து வகை பயிர் சாகுபடிக்கும் தேவையான உரங்களை முன்கூட்டியே பெற்று இருப்பு வைத்து கொள்ள வேளாண் இயக்குனரகம் உத்தரவிட்ட நிலையில் அதிகாரிகள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேளாண் இணை இயக்குனர்(பொ) விஷ்ணுராம் மேத்தி கூறுகையில், ''பருவமழை காலங்களில் வழக்கம்போல் முன்கூட்டியே தேவையான உர மூடைகள் பெற கோரிக்கை வைத்தோம். சென்னை மழை வெள்ளத்தால் உரமூடைகள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது 621.45 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்துள்ளது. விவசாயிகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இன்று(நவ.,22) முதல் விவசாயிகளுக்கு தேவையான அளவுக்கு உரம் கிடைக்கும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X