தமிழ்நாடு

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் செல்வோர்.. மகிழ்ச்சி!  18 கி.மீ., சுற்றி செல்வதற்கு வந்தது முடிவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலை விரிவாக்க பணியில், தென்னேரி போக்கு கால்வாய் மீது உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டதால், 18 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய அவலம் நீங்கியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் வழியாக, 18 கி.மீ., கீழச்சேரி வரையிலான இரு வழிச்சாலையில், கன ரகம் மற்றும் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால், அடிக்கடி
வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் செல்வோர்.. மகிழ்ச்சி!   18 கி.மீ., சுற்றி செல்வதற்கு வந்தது முடிவு

வாலாஜாபாத் : வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலை விரிவாக்க பணியில், தென்னேரி போக்கு கால்வாய் மீது உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டதால், 18 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய அவலம் நீங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் வழியாக, 18 கி.மீ., கீழச்சேரி வரையிலான இரு வழிச்சாலையில், கன ரகம் மற்றும் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்புதவிர தென்னேரி போக்கு கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.குறிப்பாக கட்டவாக்கம்அடுத்த மஞ்சமேடு பகுதியில், தாழ்வான தரைப்பாலத்தின் இரு புறமும்,தடுப்பு ஏற்படுத்தி வெள்ளப்பெருக்கு குறையும் வரை, போக்குவரத்து தடை செய்யப்படும்.

இதனால் வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் வாகன ஓட்டிகள், கட்டவாக்கம் சென்று, வாரணவாசி, மஞ்சமேடு, தென்னேரி ஆகிய கிராமங்கள் வழியாக, சுங்குவார்சத்திரம் பகுதிக்கு செல்வர்.அதேபோல், சுங்குவார்சத்திரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மஞ்சமேடு, வாரணவாசி, தேவரியம்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக வாலாஜாபாத் வந்தடையும். இரு தடத்திலும் 18 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலம்இருந்ததால்,

வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.கோரிக்கை'இந்த சாலையில் உயர்மட்ட பாலம் மற்றும்சாலையை விரிவுப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்' என, பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.இதையேற்று, மத்திய சாலைகள் நிதி திட்டத்தின்கீழ், 121.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் 2019ல் துவங்கப்பட்டன. 2021க்குள் முடிக்க, மத்திய நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர்.முதற்கட்டமாக, வாலாஜாபாத் - வண்டலுார் கூட்டுச்சாலையில் இருந்து, கட்டவாக்கம் வரை, சாலை விரிவாக்க பணி துவக்கியது.

இதில் சிறு, பெரிய தரைப்பாலங்கள் முடித்து, சாலை விரிவுப்படுத்தும் பணி முடியும் தருவாயில் இருக்கிறது.குறிப்பாக மழைக்காலங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த, தென்னேரி போக்கு கால்வாய் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறைவு பெற்று, வாகன போக்குவரத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது

.இது, வடகிழக்கு பருவ மழையின் போது தென்னேரி ஏரி நிரம்பி, உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறினாலும், வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்படாது. இனி, 18 கி.மீ., சுற்றி செல்ல வரத்தேவைஇல்லை என, வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.சாலை விரிவாக்கம் மற்றும் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. வெள்ளையடிப்பு

மற்றும் எச்சரிக்கை சின்னங்களை பொருத்தவில்லை. மழை நின்ற பின், எஞ்சிய பணிகள் முடிக்கப்படும்.சாலை விரிவாக்க திட்ட அலுவலர் ஒருவர்பருவமழைக்கு பயமில்லைமழைக்காலத்தில் தென்னேரி ஏரி நிரம்பினால், இரு கலங்கலில் இருந்து வெளியேறும் உபரி நீர், 10 நாட்களுக்கும் மேலாக, மஞ்சமேடு தரைப்பாலத்தின் மீது பெருக்கெடுத்து ஓடும்.

இதனால் 15 கி.மீ., சுற்றி வருவோம். கூடுதல் டீசல் செலவு மற்றும் நேர விரயம் ஏற்படும். கலங்கலில் தண்ணீர் குறைந்தாலும், பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. தற்போது உயர்மட்ட பாலம் கட்டி இருப்பதால், என்னைப் போன்றோருக்கு மட்டுமல்லாமல், பல தரப்பினருக்கும் மகிழ்ச்சி. இனி, பருவ மழை காலங்களில் அச்சமின்றி உயர்மட்ட பாலத்தில் செல்லலாம்.-ஏ.எம்.கண்ணன், லாரி உரிமையாளர், தென்னேரி.விபத்து தவிர்க்கப்படும்

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலை, மஞ்சமேடு தரைப்பாலத்தில் கன ரக வாகன ஓட்டிகள் செல்லும்போது மிகவும் சிரமப்படுவர். சில நேரங்களில் மேடு ஏறும்போது நிலை தடுமாறி கவிழும் வாகனங்களும் உண்டு. இனி அவ்வாறு நடக்காது வாரணவாசி, அகரம் கூட்டுச்சாலை, மஞ்சமேடு வரை கிராம சாலையாக இருப்பதால், எதிர் எதிரே வரும் வாகனங்களுக்கு ஏற்ப, பிற வாகனங்கள் ஒதுங்கி மெல்லமாக செல்ல வேண்டும்.

அந்தளவிற்கு, குண்டும் குழியுமாக இருக்கும். இந்த சாலையை விரிவுப்படுத்தினால், மாற்று ஏற்பாட்டிற்கு சவுகரியமாக இருக்கும். புதிதாக காட்டி இருக்கும் உயர் மட்ட தரைப்பாலத்தின் இருபுறமும், தடுப்பு கம்பிகள் மற்றும் எச்சரிக்கை அடையாளங்களை அமைத்தால் மட்டுமே, வாகன விபத்துகளை தடுக்க முடியும்.சாலை விபரம்வாலாஜாபாத் - கீழச்சேரி வரை- 18.4 கி.மீ.,விரிவாக்கம் 7 மீட்டர் அகலம்விரிவாக்க நான்கு வழி சாலை அகலம் 22 மீட்டர்உயர்மட்ட

பால அளவு 24 மீட்டர் அகலம்/ 38 மீட்டம் நீளம்சிறுபாலங்கள் 30உயர்மட்ட தரைப்பாலங்கள் 2மீடியன் கடவுப்பாதைகள் 25வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், மஞ்சமேடு தரைப்பாலத்தை கடக்கும் நேரம்: 5 வினாடிகள். வெள்ளப்பெருக்கால் சுற்றிச்சென்றால் 40 நிமிடங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X