பொது செய்தி

தமிழ்நாடு

கடற்படை வீரர்களுக்கு கிள்ளையில் வரவேற்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கிள்ளை : கடற்கரை தினத்தை முன்னிட்டு, சைக்கிள் பேரணி வந்த இந்திய கடற்படை வீரர்களுக்கு, கிள்ளையில், கடலுார் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. கடற்கரை தினம் டிசம்பர் மாதம் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு இந்திய கடற்படை நாகப்பட்டிணம் பிரிவு லெப்டினன்ட் கமாண்டென்ட் கர்மேந்தர் சிங் தலைமையில், 12 வீரர்கள் நாகப்பட்டிணத்தில் இருந்து

கிள்ளை : கடற்கரை தினத்தை முன்னிட்டு, சைக்கிள் பேரணி வந்த இந்திய கடற்படை வீரர்களுக்கு, கிள்ளையில், கடலுார் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கடற்கரை தினம் டிசம்பர் மாதம் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு இந்திய கடற்படை நாகப்பட்டிணம் பிரிவு லெப்டினன்ட் கமாண்டென்ட் கர்மேந்தர் சிங் தலைமையில், 12 வீரர்கள் நாகப்பட்டிணத்தில் இருந்து கடந்த 18ம் தேதி சைக்கிள் பேரணியாக புறப்பட்டு நேற்று கிள்ளைக்கு வந்தனர். கிள்ளையில், கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில், போலீசார் வரவேற்பு கொடுத்தனர். பின், கிள்ளை சின்னவாய்க்கால் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றனர். கடலில் பாதுகாப்பாகவும், சட்ட ஒழுங்கு முறையை பின்பற்றி மீனவர்கள், மீன்பிடி தொழில் செய்வது குறித்தும், கடலோர பாதுகாப்பு குறித்து பேசினர். கிள்ளையில் இருந்து சைக்கிள் பேரணியாக, கடலுார் தேவனாம்பட்டிணத்திற்கு சென்று முடித்தனர். சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், மகேந்திரன் மற்றும் மீனவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X