பொது செய்தி

தமிழ்நாடு

படூர் ஊராட்சியில்

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில், மூன்று வாரங்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதில் சாலை, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.மேலும் புதுப்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட எட்டு ஊராட்சிகளின் ஏரி உபரி நீர், படூர் ஈஷா ஏரியில் வந்து கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.இதையறிந்த

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில், மூன்று வாரங்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதில் சாலை, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் புதுப்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட எட்டு ஊராட்சிகளின் ஏரி உபரி நீர், படூர் ஈஷா ஏரியில் வந்து கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.இதையறிந்த ஊராட்சி தலைவர் தாரா சுதாகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஜே.சி.பி., இயந்திரம் வைத்து, மழை நீர் வெளியேற தற்காலிக கால்வாய்கள் அமைத்தனர்.ஏற்கனவே உள்ள மழை நீர் கால்வாய்களை துார் வாரியும், மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.மேலும், 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பாக, படூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்கவைத்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகளும் செய்யப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X