பொது செய்தி

தமிழ்நாடு

வத்தலக்குண்டு ஒன்றிய ரோடு நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரோடு விரிவாக்கம் செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டது.திண்டுக்கல் ரோடு 'அ' பிரிவு முதல் உசிலம்பட்டி ரோடு சின்னுபட்டி வரை உள்ள 5.5 கி.மீ., ரோடு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்பட்டதாக இருந்தது. இந்த ரோட்டில் மதுரையில் இருந்து வரும் வாகனங்களை திண்டுக்கல் பைபாஸ் ரோட்டிற்கு திருப்பி

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரோடு விரிவாக்கம் செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டது.

திண்டுக்கல் ரோடு 'அ' பிரிவு முதல் உசிலம்பட்டி ரோடு சின்னுபட்டி வரை உள்ள 5.5 கி.மீ., ரோடு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்பட்டதாக இருந்தது. இந்த ரோட்டில் மதுரையில் இருந்து வரும் வாகனங்களை திண்டுக்கல் பைபாஸ் ரோட்டிற்கு திருப்பி விட நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடிவு செய்தது.

இதற்கு ரோடு அகலப்படுத்த வேண்டும்.ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டுமென்றால் நெடுஞ்சாலை துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். எனவே நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி ஒன்றியத்திடம் அனுமதி கேட்டது. விரிவாக்க பணிக்கு அதிக தொகை செலவாகும் என்பதால் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த ரோடை நெடுஞ்சாலை துறையின் திட்டப்பிரிவுக்கு மாற்றி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X