தமிழ்நாடு

சாலை விரிவாக்கத்திற்காக வேருடன் புளிய மரங்கள் அகற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
சாலை விரிவாக்கத்திற்கு, பல ஆண்டுகள் வயது உடைய புளிய மரங்களை வேருடன் அகற்றுகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் - சோகண்டி கிராமம் வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., ஒருவழி சாலை உள்ளது.இச்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக,
 சாலை விரிவாக்கத்திற்காக வேருடன் புளிய மரங்கள் அகற்றம்


சாலை விரிவாக்கத்திற்கு, பல ஆண்டுகள் வயது உடைய புளிய மரங்களை வேருடன் அகற்றுகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் - சோகண்டி கிராமம் வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., ஒருவழி சாலை உள்ளது.இச்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால்,

மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக, விரிவுப்படுத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது.குறிப்பாக, 7 மீட்டராக இருக்கும் சாலை, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட வழி சாலைக்கு ஏற்ப, 44 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தும் பணி துவக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, பரந்துார், நெல்வாய், தண்டலம் உள்ளிட்ட சில இடங்களில், தரைப்பாலங்கள் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று உள்ளன.

வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ப இணைப்பு ஏற்படுத்தவில்லை.இதுதுவிர, மூலப்பட்டு கிராமத்தில் இருந்து, கொட்டவாக்கம் கிராமம் இடையே, பல ஆண்டுகள் வயது இருக்கும் புளிய மரங்களை வேருடன் அகற்றி உள்ளனர். இது, பசுமை ஆர்வலர்கள் இடையே, வேதனை ஏற்படுத்தி இருக்கிறது என, புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருக்கும் சில மரங்களை மட்டுமே அகற்றி வருகிறோம். இடையூறு இல்லாத மரங்களை தொடவே இல்லை. வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சில கிளைகளை மட்டுமே அகற்றி வருகிறோம். ஒட்டுமொத்தமாக மரங்களை அகற்றவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X