முல்லை நகரில் மூக்கை துளைக்கும் துர்நாற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
தேனி : அரண்மனைபுதுார் முல்லை நகரில் சாக்கடை கால்வாய் வசதி இன்றி தேங்கும் கழிவுநீரால் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.தேனி ஒன்றியம் அரண்மனைபுதுார் ஊராட்சியில் முல்லை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர். சி2 முதல் சி5 கட்டடங்கள் முன் சாக்கடை கால்வாய் செல்கிறது. இதில் முறையாக கழிவுநீர்

தேனி : அரண்மனைபுதுார் முல்லை நகரில் சாக்கடை கால்வாய் வசதி இன்றி தேங்கும் கழிவுநீரால் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தேனி ஒன்றியம் அரண்மனைபுதுார் ஊராட்சியில் முல்லை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர். சி2 முதல் சி5 கட்டடங்கள் முன் சாக்கடை கால்வாய் செல்கிறது. இதில் முறையாக கழிவுநீர் வெளியேறவில்லை. இதனால் சி4 கட்டடத்தின் முன் ரோட்டின் குறுக்கே பள்ளம் தோண்டி கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அதில் செடி வளர்ந்து குப்பை குவிந்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

அப்பகுதியினர் கூறுகையில், '' கழிவுநீர் செல்ல ரோட்டின் குறுக்கே தோண்டிய பள்ளம் 2 ஆண்டுகளாகியும் அப்படியே உள்ளது. இது கொசு உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கிறது. குப்பை அகற்றாததால் வீடுகளை சுற்றி குப்பை தேங்கியுள்ளன. கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி செய்ய வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X