பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு பாலம் கட்டும் பணி தாமதம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் பாலம் கட்டும் பணி தாமதம் ஆவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் தாராபுரம் செல்ல மேம்பாலத்திற்கு முன்பே சர்வீஸ் ரோடு உள்ளது. திண்டுக்கல் மார்க்கமாக வரும் வாகனங்கள் இந்த ரோட்டில் சென்று தாராபுரம் சென்றன.இந்நிலையில் செல்லப்பகவுண்டன் புதூர் பகுதியில் மழைக் காலத்தில்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் பாலம் கட்டும் பணி தாமதம் ஆவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் தாராபுரம் செல்ல மேம்பாலத்திற்கு முன்பே சர்வீஸ் ரோடு உள்ளது. திண்டுக்கல் மார்க்கமாக வரும் வாகனங்கள் இந்த ரோட்டில் சென்று தாராபுரம் சென்றன.இந்நிலையில் செல்லப்பகவுண்டன் புதூர் பகுதியில் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி குடியிருப்புகள் விளை நிலங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

எனவே, மாற்று ஏற்பாடாக இப்பகுதியில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்காக தாராபுரம் ரோட்டுக்கான சர்வீஸ் ரோடு அடைக்கப்பட்டது. பணிகள் பாதியில் நிற்கின்றன. தாராபுரம் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தில் சென்று இடதுபுறம் சர்வீஸ் ரோட்டில் திரும்பி, பின்னர் தாராபுரம் ரோட்டில் செல்ல வேண்டும்.

ஆனால் சர்வீஸ் ரோட்டில் செல்வதற்கு எங்கு திரும்ப வேண்டும் என்ற அறிவிப்பு இல்லை. இதனால் வாகனங்கள் பல கி.மீ., பயணித்து பழநி - -திண்டுக்கல் ரோட்டை அடைந்து மீண்டும் திரும்பி வருகின்றன. இதனை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு நன்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பாலம் கட்டும் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X