பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சியம்மன் கண்மாயில் படகு சவாரி; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

Added : நவ 22, 2021
Share
Advertisement
போடி : போடி பகுதியில் பெய்து வரும் மழையால் மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு சவாரி துவங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போடி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய். 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம்,

போடி : போடி பகுதியில் பெய்து வரும் மழையால் மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு சவாரி துவங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போடி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய். 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, பத்ரகாளிபுரம், மீனாட்சிபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களின் கிணறுகளில் நீர் சுரக்கும். மேலும் 450 ஏக்கருக்கும் அதிகமாக பாசன வசதி பெறும்.போடி, குரங்கணி, கொட்டகுடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, பங்காருசாமி, சங்கரப்பன், மீனாட்சியம்மன் கண்மாய் முழுவதும் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.

மீனாட்சியம்மன் கண்மாயில் ஆண்டு தோறும் டிச., ஜன. பிப்., மாதங்களில் முக்குளப்பான், பாம்புதார, கூழைக்கிடா, மஞ்சள் மூக்குநாரை, பிளமிங்கோ பறவைகள், கடல்சார்ந்த கொக்குகளும் இரை தேட வந்து இனப்பெருக்கம் மேற்கொள்ளும். ஏப்., மே., மாதங்களில் சொந்த பகுதிகளுக்கு சென்றுவிடும். பறவைகள் தங்கும் வகையில் கண்மாய் கரையோரங்களில் மரங்கள் வளர்த்து, கண்மாயில் தேக்கமான பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதோடு, அரசுக்கும் வருமானம் கிடைத்திடும் வகையில் படகு சவாரி துவங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X