தமிழ்நாடு

கிராமங்களில் புகுந்த பெண்ணையாற்று வெள்ள நீர்... வடிகிறது;  40 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழுகி வீணாகின

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் அருகே 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்து நாசமாக்கிய வெள்ள நீர் தற்போது வடிந்து வருகிறது. 40 ஆயிரம் ஏக்கர் நெல் வயல் முழுவதும் பாதித்தன. வெள்ளநீரின் வேகத்தால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.கடந்த வாரம் கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. அதனால் மாவட்டத்தில் உள்ள 90 சதவீதம் நீர்நிலைகள் முழு
கிராமங்களில் புகுந்த பெண்ணையாற்று வெள்ள நீர்... வடிகிறது;   40 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழுகி வீணாகின

கடலுார் : கடலுார் அருகே 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்து நாசமாக்கிய வெள்ள நீர் தற்போது வடிந்து வருகிறது. 40 ஆயிரம் ஏக்கர் நெல் வயல் முழுவதும் பாதித்தன.

வெள்ளநீரின் வேகத்தால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.கடந்த வாரம் கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. அதனால் மாவட்டத்தில் உள்ள 90 சதவீதம் நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து பெய்த கனமழையால் கடந்த 19ம் தேதி தென் பெண்ணையாற்றில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கடலில் வடியும் இடத்தில் சரி வர உள்வாங்காததால் விளைநிலங்கள் வழியாக புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் வெயில் காய்வதால்கிராமங்களுக்குள்புகுந்த தண்ணீர் வடிய துவங்கியுள்ளது. மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டுள்ளது.

கடலுார் அருகே வெளிச்செம்மண்டலம், நடேசன் நகர், சாவடி, கோண்டூர், நத்தமேடு, குறிஞ்சிநகர், சக்தி நகர், ஜோதி நகர், திடீர்குப்பம், குமரப்பன்நகர், பண்ருட்டி, பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆற்றங்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளன.

இதனால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.40 ஆயிரம் ஏக்கர் பாழ் கடலுார் அருகே உள்ள வெள்ளப்பாக்கம், அழகியநத்தம், நாணமேடு, உச்சிமேடு, சுபா உப்பலவாடி, கண்டக்காடு, கங்கணாங்குப்பம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெல் நடவு செய்திருந்த வயல்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. சில வயல்களில் மண்மேடாகி பயிர்களை மூடியுள்ளன. விவசாயிகள் நடவு செய்த பயிர்கள் இழப்பு ஒரு புறமும், நிலத்தை சீராக்க அதிகம் செலவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சாலை முழுவதும் சேதம்வெள்ளத்தின் வேகத்தால் பல சாலைகள் சேதமாகின. கடலுார் - புதுச்சேரிக்கு செல்லும் சாலையில் உச்சிமேட்டில் இருந்து சுபா உப்பலவாடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 2 நாட்களாக வெள்ளநீர் ஓடியதால், தார் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து வெளியே தெரிகிறது.

அதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளது. மேலும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியுள்ளது. பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சாலைப் பணியை மேற்கொள்ளவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X