அதிகாரிகள் மெத்தனத்தால் கிராமங்களில் தண்ணீர் புகுந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் மெத்தனத்தால் கிராமங்களில் தண்ணீர் புகுந்தது

Added : நவ 22, 2021
Share
கடலுார் : பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெண்ணையாற்றை சீரமைக்காததால் வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்து செல்ல காரணமாக அமைந்தது.ஆண்டு தோறும் அதிக மழை பெய்யும் போது, கெடிலம் ஆற்றில் தான் வெள்ளம் வருவது வழக்கம். இதனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கெடிலம் ஆற்றில் வளர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்றி, தண்ணீர் செல்ல வழிவகை செய்வர். இந்த ஆண்டும் கெடிலம் ஆற்றை சீரமைத்தனர்.

கடலுார் : பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெண்ணையாற்றை சீரமைக்காததால் வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்து செல்ல காரணமாக அமைந்தது.ஆண்டு தோறும் அதிக மழை பெய்யும் போது, கெடிலம் ஆற்றில் தான் வெள்ளம் வருவது வழக்கம்.

இதனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கெடிலம் ஆற்றில் வளர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்றி, தண்ணீர் செல்ல வழிவகை செய்வர். இந்த ஆண்டும் கெடிலம் ஆற்றை சீரமைத்தனர். ஆனால் பெண்ணையாற்றை கண்டு கொள்ளவில்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டது. ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள்,

ஆற்றின் நடுவே வளர்ந்த கருவேல மரங்கள், பெண்ணையாற்றின் புதுச்சேரி மாநில கரையோரம் தடுப்பு சுவரின்றி இருந்த பகுதி வழியாக கிராமப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.தாழங்குடா அருகே உள்ள முகத்துவாரம், புதுச்சேரி மாநில எல்லையில் புதுக்குப்பம் முகத்துவாரம், தேவனாம்பட்டினம் முகத் துவாரம்

ஆகிய 3 முகத்துவாரங்கள் திறந்திருந்தும் தண்ணீர் உள்வாங்கவில்லை.கடந்த 3 மாதங்களாக பருவமழை தொடர்பாக கூட்டம் நடத்தியும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்தனர். வருங்காலங்களில் இது போன்ற வெள்ளத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X