பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

Added : நவ 22, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கோவிட்-19 மற்றும் போதை விழிப்புணர்வு மாநில மினி மாரத்தான் போட்டி நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட தடகள சங்கம், ஜி.டி.என்., மருத்துவக் கல்லுாரி, மேற்கு ரோட்டரி சங்கம், காஸ்மா பாலிட்டன் கிளப் சார்பில் நடந்த போட்டியை கலெக்டர் விசாகன் கொடியசைத்து துவக்கினார். இதில் 1,500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஆண்கள் 11.5 கி.மீ.,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கோவிட்-19 மற்றும் போதை விழிப்புணர்வு மாநில மினி மாரத்தான் போட்டி நடந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட தடகள சங்கம், ஜி.டி.என்., மருத்துவக் கல்லுாரி, மேற்கு ரோட்டரி சங்கம், காஸ்மா பாலிட்டன் கிளப் சார்பில் நடந்த போட்டியை கலெக்டர் விசாகன் கொடியசைத்து துவக்கினார். இதில் 1,500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஆண்கள் 11.5 கி.மீ., பெண்கள் 5 கி.மீ., துாரம் ஓடினர். வென்றவர்களுக்கு எஸ்.பி., ஸ்ரீனிவாசன், டி.ஆர்.ஓ., லதா பரிசு வழங்கினர்.

ஆண்களில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், பெண்களில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன், ஜி.டி.என்., கல்லுாரி தாளாளர் ரெத்தினம், முதல்வர் பாலகுருசாமி, மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி பங்கேற்றனர். ஏற்பாடுகளை தடகள சங்க தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X