பொது செய்தி

தமிழ்நாடு

சுவர் இடிந்து விழுந்து வயதான தம்பதி பலி

Added : நவ 22, 2021
Share
Advertisement
மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வயதான தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.மதுராந்தகம் ஒன்றியம், ஜமீன் எண்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாசலம், 70. இவரது மனைவி செந்தாமரை 60. இருவரும், அப்பகுதியில் மண் சுவரால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.கன மழைசில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, இவர்களது

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வயதான தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுராந்தகம் ஒன்றியம், ஜமீன் எண்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாசலம், 70. இவரது மனைவி செந்தாமரை 60. இருவரும், அப்பகுதியில் மண் சுவரால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.கன மழைசில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, இவர்களது வீட்டின் மண் சுவர் அதிக ஈரம் படிந்து இருந்ததாக கூறப்படுகிறது.வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு தம்பதி இருவரும், உணவு முடித்து, வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்து

உள்ளனர்.நள்ளிரவில், வீட்டின் ஒரு பகுதி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.ஆய்வுஅதிகாலையில் வீட்டுச் சுவர் இடிந்திருப்பத்தை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சித்தாமூர் போலீசார், தம்பதி இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.மதுராந்தகம் வட்டாட்சியர் நடராஜன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X