பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் அலட்சியத்தால் மக்கள் தவிப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கடலுார் : தி.மு.க., அரசின் அலட்சியத்தினால் பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பத் கூறினார்.தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதித்த பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, இரண்டாயிரம் விளாகம், அழகிய நத்தம் உட்பட பல கிராமங்களில் விவசாய நிலங்களை முன்னாள் அமைச்சர் சம்பத் பார்வையிட்டார். பாதித்த மக்களுக்கு தேவையான
 அரசின் அலட்சியத்தால் மக்கள் தவிப்பு

கடலுார் : தி.மு.க., அரசின் அலட்சியத்தினால் பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பத் கூறினார்.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதித்த பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, இரண்டாயிரம் விளாகம், அழகிய நத்தம் உட்பட பல கிராமங்களில் விவசாய நிலங்களை முன்னாள் அமைச்சர் சம்பத் பார்வையிட்டார். பாதித்த மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: சாத்தனுார் அணை திறக்கும் போது கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடப்படும். இந்த ஆண்டு எச்சரிக்கவில்லை. தி.மு.க., அரசின் அலட்சியத்தால் ஏராளமான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மழை வெள்ளத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

கெடிலம் ஆறு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரைகளை உடனே பலப்படுத்தி வெள்ள நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் 16 ஆயிரத்து 500 எக்டேர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது. மழையால் பாதித்த நெற்பயிருக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநில மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், கந்தன், தமிழ்ச்செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X