பொது செய்தி

இந்தியா

தாவணகரேவில் தொடர்ந்து கன மழை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழ்

Added : நவ 22, 2021
Share
Advertisement
தாவணகரே : தாவணகரேவில் ஒரு வாரமாக பெய்யும் கன மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மூவரை பலி வாங்கியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதில் பயிர்கள் பாழாகின.தாவணகரேவில் ஒரு வாரமாக இடைவிடாமல் மழை பெய்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர். மாயகொண்டா அருகிலுள்ள ராமபுரா ஏரியில், நேற்று முன் மதியம் எருமை மாட்டை குளிப்பாட்ட சென்ற திப்பேஷ், 40, என்பவர்
 தாவணகரேவில் தொடர்ந்து கன மழை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழ்

தாவணகரே : தாவணகரேவில் ஒரு வாரமாக பெய்யும் கன மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மூவரை பலி வாங்கியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதில் பயிர்கள் பாழாகின.தாவணகரேவில் ஒரு வாரமாக இடைவிடாமல் மழை பெய்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

மாயகொண்டா அருகிலுள்ள ராமபுரா ஏரியில், நேற்று முன் மதியம் எருமை மாட்டை குளிப்பாட்ட சென்ற திப்பேஷ், 40, என்பவர் கால் தவறி ஏரியில் விழுந்தார்.தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், அவரது உடலை தேடுகின்றனர். இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் தொடர்ந்தது.ஹரிஹரா கோவிஹால் கிராமத்தில் ஆட்டு

கொட்டகை இடிந்து பசவராஜ், 60, உயிரிழந்தார். கொட்டகையில் இருந்த எட்டு ஆடுகள் இறந்தன. சம்பவ இடத்தை எம்.எல்.ஏ., ராமப்பா, தாசில்தார் ராமச்சந்திரா நேற்று பார்வையிட்டனர்.தாவணகரே அருகில் ஐகூர் கிராமத்தில் ஏரி நிரம்பி கரை உடைந்துள்ளது. தண்ணீர் பாய்ந்து வருவதை காண, நேற்று காலை பைக்கில் சென்ற தர்ஷன், நவீன் ஆகிய இளைஞர்கள், வீடு திரும்பும் போது, வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில்,

இவ்விருவரும் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.ஹரிஹராவில் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைந்திருந்த பயிர்கள் பாழானது. விவசாயிகள் கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் உள்ளனர்.கோவினஹாளு கிராமத்தில் மழையால் வீடு இடிந்து ஹாலப்பா, 62, உயிரிழந்தார். இரண்டு ஆடுகள் இறந்தன. இதே போன்று நாமதி, சென்னகிரி, ஜகலுார் உட்பட மற்ற தாலுகாக்களிலும், வீடுகள் இடிந்தன. பயிர்கள் பாழாகின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X