பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி தக்காளி ரூ.100க்கு விற்பனை

Added : நவ 22, 2021
Share
Advertisement
திண்டிவனம் : தொடர் மழை காரணமாக திண்டிவனத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானது.வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.திண்டிவனத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 40ல் இருந்து 50

திண்டிவனம் : தொடர் மழை காரணமாக திண்டிவனத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானது.வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.திண்டிவனத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 40ல் இருந்து 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. நேற்று முன்தினத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் மார்க்கெட்டிற்கு ஆந்திராவிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பதால், தக்காளி விலை மற்ற இடங்களை விட குறைவாக இருந்தது. தற்போது ஆந்திராவில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, தக்காளி வரத்து குறைந்தது. இதனால், விலை உயர்ந்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X