தமிழ்நாடு

50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது; விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலை

Added : நவ 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலும் கிராம பகுதிகள் அதிகமுள்ளதால் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இங்கு, அதிக ஏக்கர் பரப்பளவு நெல், கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இதையடுத்து,
 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது;   விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலை


விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலும் கிராம பகுதிகள் அதிகமுள்ளதால் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இங்கு, அதிக ஏக்கர் பரப்பளவு நெல், கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இதையடுத்து, மணிலா, மக்காசோளம், உளுந்து, எள், காராமணி மட்டுமின்றி பழங்கள், காய்கறிகள் சாகுபடிகள் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்ததால் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 506 ஏரிகளில் 389 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுபாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியது. தென்பெண்ணை ஆறு மற்றும் கிளை ஆறுகளிலும் தண்ணீர் வெள்ளமாக ஓடியது.இந்த தண்ணீர் குடியிருப்புகள் மட்டுமின்றி விவசாய நிலங்களையும் மூழ்கடித்தது. காணை அருகே அகரம் சித்தாமூர் தரைபாலம் வெள்ளப்பெருக்கில் மூழ்கி, வாழப்பட்டு, கெடார், வீரமூர், சூரப்பட்டு, செல்லம்பட்டு, அரியலுார், கஞ்சனுார், சிறுவாலை, அரியூர், அனந்தபுரம் உட்பட பல கிராம விளை நிலங்களின் சாகுபடி செய்த பயிர்கள் மூழ்கியது.கோலியனுார் அருகே வெ.அகரம், பஞ்சமாதேவி, அரசமங்கலம், சேர்ந்தனுார் உள்பட பல கிராமங்களில் ஆழங்காலில் தண்ணீர் அதிகம் சென்றது.

இதனால், அங்கு சாகுபடி செய்திருந்த பல ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களும் நீரில் மூழ்கியது. தண்ணீர் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக வெளியேறாமல் தேங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர் சாகுபடிகள் நீரில் மூழ்கியதை வேளாண் துறை அதிகாரிகள் விரைவாக கணக்கீடு செய்து, உரிய இழப்பீட்டை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக, வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் கனமழை பெய்து, நிலங்களில் தண்ணீர் மூழ்கியுள்ளது. இது வடிந்தால் தான் பயிர்கள் சேதம் முழுமையாக கணக்கிட முடியும். தற்போது வரை மாவட்டத்தில், 45 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு, மணிலா, வாழை, கேழ்வரகு உள்பட பல்வேறு பயிர்கள் மூழ்கியுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X