பொது செய்தி

இந்தியா

கிராம பஞ்., உறுப்பினர்களுக்கு திடீர் 'டிமாண்ட்' வேட்பாளர்களுக்கு ஆசை காண்பிக்கும் கட்சிகள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பெங்களூரு, : கர்நாடக சட்ட மேலவை தேர்தலால், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு திடீர் 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. இவர்களின் ஆதரவை பெற, அரசியல் கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி எழுந்துள்ளது.கர்நாடகா மேலவையின், 25 இடங்களுக்கு டிசம்பர் 10ல், தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சி உறுப்பினர்களே, வாக்காளர்கள் என்பதால் இவர்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.கட்சி சின்னம் இல்லாமல்

பெங்களூரு, : கர்நாடக சட்ட மேலவை தேர்தலால், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு திடீர் 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. இவர்களின் ஆதரவை பெற, அரசியல் கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி எழுந்துள்ளது.கர்நாடகா மேலவையின், 25 இடங்களுக்கு டிசம்பர் 10ல், தேர்தல் நடக்கிறது.

உள்ளாட்சி உறுப்பினர்களே, வாக்காளர்கள் என்பதால் இவர்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.கட்சி சின்னம் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். இவர்கள் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பர் என்றாலும், இவர்களுக்கு கட்சி மேலிடம்

உத்தரவிட முடியாது.எனவே, விருப்பமானவருக்கு ஓட்டு போடலாம். கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களை இழுக்க, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.ஆசை வார்த்தைகள் காண்பித்து, தங்களின் வேட்பாளர்களை ஆதரிக்கும்படி மன்றாடுகின்றனர். கிராமங்களின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.

இதற்கிடையில் தேர்தல் செலவுக்கு, பணத்தை புரட்டுவது வேட்பாளர்களுக்கு பெரும்பாடாக உள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்றால், அந்தந்த கட்சி மேலிடமே தேர்தல் செலவுக்கு உதவி செய்யும்.ஆனால் 'லாபி' நடத்தி நெருக்கடி கொடுத்து டிக்கெட் பெறும் வேட்பாளர்கள் தேர்தல் செலவை தாங்களே செய்து கொள்ள வேண்டும்.தங்களுக்கு ஆதரவாக பணியாற்றும் மாவட்ட, தாலுகா அளவிலான தலைவர்களை 'கவனிக்க' வேண்டும். இதற்காக பெருந்தொகை தேவைப்படும். பணத்தை செலவிட முடியாது என்பதால், போட்டியிட வேண்டுமென்ற ஆசையிருந்தாலும், டிக்கெட் கேட்பதில்லை.கட்சி மேலிடம் களமிறக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X